games

img

டி-20 உலகக்கோப்பை - ஸ்பெஷல் தென் ஆப்பிரிக்கா அணி எப்படி?

இதுவரை எந்த உலகக்கோப்பையும் வெல்ல முடியாமல் சோகமான வரலாறுடன் மிரட்டல் அணியாக வலம் வரும் கிரிக்கெட் உலகின் அபாயகரமான அணியான தென் ஆப்பிரிக்கா அணி 8-வது சீசன் டி-20 உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் கடந்த காலங்களை போன்றே வலுவாக களமிறங்குகிறது.  குறிப்பாக பேட்டிங் பிரிவு மிகவும் மிரட்டலாக உள்ளது. விக்கெட் கீப்பர் பிரிவுகளில் சேர்க்காமல் 5 பேட்டர்கள் உள்ளனர். விக்கெட் கீப்பர் பிரிவுகளை சேர்த்தால் அதாவது அதிகபட்சம் 2 விக்கெட் கீப்பர் சேர்த்தால் பேட்டிங் பலம் 7 ஆக உயரும். பேட்டிங் பிரிவை போலவே பந்துவீச்சிலும் 5 நபர்களுடன் வலுவாக களமிறங்குகிறது தென் ஆப்பிரிக்கா. ஆனால் ஆல்ரவுண்டர் பிரிவில் அந்த அணியில் பார்னெல், பிரெட்டோரியஸ் ஆகிய 2 பேர் மட்டுமே உள்ளனர். ஆல்ரவுண்டர்களின் இந்த விகிதம் பேட்டிங்கில் சற்று கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தும். காரணம் ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் உயிரோட்டமானது. அதனால் போதுமான அளவு ஆல்ரவுண்டர்கள் அந்த மண்ணில் கட்டாயம் தேவை என்பதை உணராமல் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் நிர்வாகம் வீரர்கள் தேர்வில் சற்று சொதப்பியுள்ளது. மேலும் ஆல்ரவுண்டர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள பார்னெல், பிரெட்டோரியஸ் ஆகியோர் பெரியளவு பேட்டிங் பார்ம் இல்லாதவர்கள் என்பதும் மிகப்பெரிய மைனஸாக உள்ளது. இதுபோக பந்துவீச்சு, ஆல்ரவுண்டர் துறையில் பார்ம் பிரச்சனையில் 50% வீரர்கள் உள்ளனர். இது அந்த அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம்.

வீரர்கள் விவரம்

கேப்டன் : தெம்பா பவுமா (பேட்டிங்)
பேட்டிங் : எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரிலீ ரோசோவ்
விக்கெட் கீப்பர் : குயிண்டன் டி காக், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டன் ஸ்டப்ஸ்
ஆல்ரவுண்டர் : வெய்ன் பார்னெல், டுவைன் பிரிட்டோரியஸ்
பந்துவீச்சு : கேசவ் மகராஜ், லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ட்ஜ், காகிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி