games

img

ஆசியக் கோப்பை யாருக்கு? - இலங்கை - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

15-வது சீசன் ஆசியக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. இறுதி ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 

யாருக்கு வெற்றி?

இரு அணிகளும் சமபலத்தில் இருப்ப தால் யாருக்கு கோப்பை? என்பதை திடமாக கணிக்க முடியாது. இருப்பினும் இளங்கன்று பயம் அறியாது என்ற சொற்றொடருக்கு ஏற்ப மிரட்டலான ஆட் டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணி, ஆசியக் கோப்பை தொடரில் மிகவும் பலமாக களமிறங்கிய இந்தியா, பாகிஸ் தான் அணிகளை “சூப்பர் 4” சுற்றுக ளில் புரட்டியெடுத்து தோல்வியின் சுவா சத்தை உணராமல் இறுதிக்கு முன்னே றியுள்ளதால் அந்த அணிக்கு கோப்பை யை கைப்பற்ற சகல வாய்ப்புகள் உள்ளது. முக்கியமாக கடைசி “சூப்பர் 4” சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி யை வீழ்த்திய அனுபவத்தில் களமிறங்கு வதால் இலங்கை அணிக்கு இது கூடு தல் சாதகத்தை ஏற்படுத்தும். கோப்பை யை கைப்பற்றும் அளவிற்கு போதிய அளவு அனுபவ வீரர்களால் நிரம்பி வழி யும் பாகிஸ்தான் அணி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடைசி “சூப்பர் 4” சுற்று ஆட்டத்தில் இலங் கை அணியிடம் படுதோல்வி கண்ட கடுப்பில் இருக்கும் பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு தக்க பதிலடியுடன் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் பாகிஸ்தான் களமிறங்குவதால் ஆசியக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இலங்கை - பாகிஸ்தான்
இடம் : துபாய் 
நேரம் : இரவு 7:30 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள் (ஹாட் ஸ்டார் கணக்குகள் இருந்தால் ஸ்மார்ட்போனில் காணலாம்)

ரசிகர்களின் மனதை வென்றுள்ள இலங்கை அணி

நாட்டில் அரங்கேறும் பொருளாதார நெருக்கடி, அணியில் இயல்பு நிலை இல்லாமை, சீனியர் வீரர்கள் யாரும் இல்லாமல் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட இலங்கை அணி ஆசியக்கோப்பை தொடரில் அபாயகரமான அணி என்ற அடைமொழியுடன் மிரட்டி வருகிறது. அனுபவ வீரர்கள் இலங்கை அணி  “சூப்பர் 4” சுற்றுக்கு முன்னேறுமா என ஆசியக் கோப்பை தொடங்கும் முன் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அவ்வாறு எழுந்த விமர்சனங்களுக்கு தனது அபார ஆட்டத்தால் பதிலடி கொடுத்துள்ளது இலங்கை அணி. ஆசியக் கோப்பையில் இலங்கை அணி கோப்பையை வென்றாலும், வெல்லா விட்டாலும் “சூப்பர் 4” சுற்றில் பலமான இந்திய அணியை வீழ்த்திய பொழுதே ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் மனதை வென்று விட்டது. காரணம் இளசுகளால் எதையும் சாதிக்கலாம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது இலங்கை அணி. சங்க கரா, ஜெயவர்த்தனே, மலிங்கா விட்டுச்சென்ற பழைய இலங்கை அணியை மீட்டெடுக்கும் முயற்சியில் மிகவும் கவன மாக செயல்பட்டு வரும் இளம் கேப்டன் சனகா கிரிக்கெட் உலகின் கவனிக்கும் நபராக வலம் வருகிறார். எது எப்படியோ? இலங்கை அணி மீண்டும் மிரட்டல் அணியாக உருவெடுத்துள்ளது கிரிக்கெட் உலகிற்கு கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

;