games

img

விளையாட்டு...

இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடரை மிரட்டும் ஸ்பெயின் இளம் வீரர்

அமெரிக்காவின் கலி போர்னியா நகரில் நடை பெற்று வரும் இந்தியன் வேல்ஸ் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரும், ஸ்பெயின் இளம் வீரருமான அல்காரஸ் (19) புயல் வேகத்தில் விளையாடி வருகிறார்.  தொடக்க சுற்று முதலே நேர் செட்டில் வெற்றியை குவித்து வரும் அல்காரஸ் புதனன்று நடை பெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து முன்னணி வீரர் ட்ராப்பரை 6-2, 6-0 என்ற கணக்கில் புரட்டியெடுத்து காலிறுதிக்கு முன்னேறினார்.  இதே பிரிவில் இத்தாலியின் சின்னர், கனடாவின் பெலிக்ஸ், அமெரிக்க வீரர்கள் பிரான்சிஸ், டெய்லர், இங்கிலாந்தின் நோரி  ஆகியோரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். காலிறுதி ஆட்டங்கள் வியாழனன்று தொடங்கு கிறது.

கார்சியா அவுட் 

புதனன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 4-ஆம் சுற்று ஆட்டத்தில், உலகின் 5-ஆம் நிலை வீராங்க னையான பிரான்ஸ் நாட்டின் கார்சியா தரவரிசையில் இல்லாத ருமேனியாவின் கிறிஸ்டியாவிடம் 4-6, 6-4, 5-7 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரில் இருந்து வெளியேறினார். மற்றோரு 4-ஆம் சுற்று ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான செக்குடியரசின் கெர்ஜிசிகோவா, பெலார சின் சபலென்காவிடம் 3-6, 6-2, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்து வெளியேறினார்.  போலந்தின் ஸ்வியாடெக், கஜகஸ்தானின் ரைபகினா, செக்குடியரசின் கிவிடோவா ஆகியோர் பெரியளவு போராட் டம் இன்றி காலிறுதிக்கு முன்னேறினர். 

தில்லி
கிரிக்கெட் உலகின் பணக்கார வீரர்கள் பட்டியல்
டாப் ஆர்டரில் இந்திய வீரர்கள்

உலகின் முன்னணி வணிக இதழான சிஇஓ வேர்ல்ட் (CEOWORLD) வெளியிட்ட கிரிக்கெட்  உலகின் பணக்கார வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான கில்கிறிஸ்ட் (ரூ. 3,134 கோடி) முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின் தெண்டுல் கர் (ரூ. 1,402 கோடி) இரண்டாவது இடத்திலும்,தோனி (ரூ. 948 கோடி) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.  கோலி (ரூ.924 கோடி) 4-வது இடத்திலும், ஆஸ்திரே லிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (ரூ.619 கோடி) 5-வது இடத்திலும் உள்ள நிலையில், கல்லிஸ் (தென் ஆப்பிரிக்கா - ரூ.577 கோடி), லாரா (மே.இ.தீவுகள்  - ரூ.495 கோடி), இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சேவாக் (ரூ.330 கோடி), யுவராஜ் சிங் (ரூ.288 கோடி), ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் (ரூ.247 கோடி) ஆகியோர்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளனர்.

யாரென்று தெரியாமல் ஆய்வு நடத்தி சிக்கிக்கொண்ட சிஇஓ வேர்ல்ட் 

கில்கிறிஸ்ட் குழப்பம்.. சச்சின் முதலிடம்...

சிஇஓ வேர்ல்ட் பணக்காரர் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் முதலிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் அவரது பெயரி லேயே மற்றொரு தொழிலதிபர் ஒருவர் “எப் 45” என்ற ஜிம்மை நடத்திவருகிறார். அவரின் சொத்து மதிப்பும் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் சொத்து மதிப்பும் சேர்த்து கணக்கிடப்பட்ட தால் தவறு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2-வது இடத்தில் உள்ள சச்சின் முதலிடத்துக்கு முன்னேறினார்.

இன்றைய டபிள்யுபிஎல் ஆட்டம்
தில்லி - குஜராத்
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : பிராபோர்ன் மைதானம், மும்பை
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா ஓடிடி (இலவசம்)



 

;