games

img

6 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி டிஎல்எஸ் முறையில் 6 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

லக்னெளவில் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. பூணம் ராவுத் 77 ரன்கள் எடுத்தார். கேப்டன் மிதாலி ராஜ், ஹர்மண்ப்ரீத் கெள்ர் , தீப்தி சர்மா ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது. மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் டிஎல்எஸ் முறையில் தென் ஆப்பிரிக்க அணி முன்னணியில் இருந்ததால், தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் தொடக்க வீராங்கனை லிஸ்லி லீ கடைசி வரை ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் எடுத்தார்