27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பை வென்று வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா
உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி அசத்தல்
டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவா ரஸ்யத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 2019ஆம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பி யன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி). நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த தொடரின் முதலாவது சீசனில் நியூ சிலாந்து அணியும், 2ஆவது சீசனில் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை வென்ற நிலையில், 2 சீசன்களிலும் இந்திய அணி 2ஆவது இடம் பெற்றது. கடந்த 2 வருடமாக நடைபெற்று வந்த 3ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும், தென் ஆப்பிரிக்கா அணிகளும் தகுதி பெற்றன. இந்நிலையில், ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோத உள்ள இறுதிப் போட்டி இங்கிலாந்து தலை நகர் லண்டனில் உள்ள பிரபல லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி புதன் கிழமையன்று மாலை 3 மணிக்கு தொடங்கியது.
கம்மின்ஸ் அபாரம்
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெப்ஸ்டர் (72), ஸ்மித் (66) ஆகியோரின் நிதான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 56.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென் ஆப்பி ரிக்கா தரப்பில் ரபடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் வேகத்தில் கடுமையாக திணறியது. பெடிங்காம் (45), பவுமா (36) ஓரளவு தாக்குப்பிடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 57.1 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா திணறல்
74 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர்களான ரபடா (4), நிகிடி (3) ஆகியோரின் பந்துவீச்சைதாக் குப்பிடிக்க முடியாமல் கடுமையாக திணறி யது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஸ்டார்க் (58) இறுதிக்கட்டத்தில் போராட மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்ட மிழந்தனர். விக்கெட் கீப்பர் அலெக்ஸ் (43) ஓரளவு ரன் சேர்த்து உதவினார். இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரே லியா 65 ஓவர்களில் 207 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து, தென் ஆப்பிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 282 ரன்கள் நிர்ணயித்தது.
மார்கிராம் கலக்கல்
எட்டக்கூடிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி தொடக்கத்தி லேயே ரிக்கில்டனை (6) இழந்தது. அதே போல முல்டரும் (27) வந்த வேகத்தில் வெளியேறினார். எனினும் அனுபவ வீரர் மார்கிராம் - பவுமா ஜோடி லார்ட்ஸ் மைதா னத்தில் நங்கூரம் அமைத்தது. இதில் மார்கிரம் பொறுப்புடன் விளையாடி சத மடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்தார். 3ஆவது விக்கெட்டு க்கு மார்கிரம்- பவுமா ஜோடி 143 ரன்கள் சேர்த்தது. மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்திருந்தது. மார்கிரம் 102 ரன்னுடனும், பவுமா 65 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சனிக்கிழமை அன்று தொடர்ந்து 4ஆம் நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மேலும் ஒரு ரன் எடுத்து 66 ரன்னில் பவுமா ஆட்டமிழந்தார். ஸ்டப்ஸ் 8 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். அடுத்து வந்த பெடிங்காம் மார்கிராடன் நிதானமாக விளையாடினார். வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற போது, மார்கிராம் 136 ரன்கள் எடுத்த நிலை யில் ஆட்டமிழந்தார். 7ஆவது விக்கெட்டு க்கு பெடிங்காம் உடன் வெர்ரைன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற னர். இறுதியில் 83.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பி ரிக்கா அணி அபார வெற்றி பெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பை வென்று வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்காவிற்கு உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.