“மாரடோனா”... இந்த பெயர் இல்லா மல் உலககால்பந்து இல்லை. “மார டோனா” என்ற பெயர் இல்லாமல் அர்ஜெண்டி னா என்ற நாடு கூட உலகத்திற்கு ஒரு நட்சத்திர பெயராக இருந்திருக்காது. இன்னும் சொல்லப்போனால் உலகக்கால்பந்து, உலகக் கோப்பை கால்பந்து என்ற வரலாறு “மாரடோ னா” என்ற பெயர் இல்லாமல் முழுமையடை யாது. இவ்வளவு சிறப்புடன் கால்பந்து உலகின் ஜொலிக்கும் நட்சத்திரமாக விளங்கிய மாரடோனா மறைந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடையும் வேளையில், தற்போதைய நவீன கால்பந்து உலகில் மாரடோனா இல்லா மல் முதன்முறையாக உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் அரங்கேறவுள்ளன. 2020 நவம்பர் 25 அன்று மாரடோனா இவ்வு லகோடு விடைசொல்லிச் சென்றார். இதனால் நடப்பு சீசன் உலகக்கோப்பையை வென்று மாரடோனாவுக்குச் சமர்ப்பிக்க கிளைமேக்ஸ் உடன் களமிறங்குகிறது அர்ஜெண்டினா. 18-வது முறையாக அர்ஜெண்டினா உலகக்கோப்பைப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள அர்ஜெண்டினா 1978, 1986 ஆகிய இருமுறை கோப்பையை வென்றுள்ளது. 1986- ஆம் ஆண்டு (பிரான்ஸ்) உலகக் கோப்பை தொடரில் தெய்வத்தின் கையாலும், நூற்றாண்டின் சிறந்த கோலாலும் மாரடோ னா அர்ஜென்டினாவிற்குக் கோப்பையை பெற்றுத்தந்தார்.
1930, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டிகளில் அர்ஜெண்டினா இரண்டாமிடம் பிடித்தது. கடந்த முறை ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் சிரமப்பட்டு முதல் சுற்றைத் தாண்டிய அர்ஜெண்டினா , காலிறுதியில் பிரான்சிடம் தோற்று வெளியேறியது. 22-வது சீசனில் தென் அமெரிக்காவிலிருந்து தகுதி பெற்றுள்ள அணிகளில் இரண்டாம் இட அந்தஸ்துடன் பட்டியலில் இடம்பெற்றுள்ள அர்ஜெண்டினா தகுதிச் சுற்றில் 17 ஆட்டங்க ளில் 11 வெற்றி 6 சமநிலைகளுடன் 27 கோல் ல்கள் அடித்து அசத்தியது. முக்கியமாக கத்தார் உலகக்கோப்பை தொடரில் மிக முக்கிய சம்பவம் ஒன்று அரங்கேறவுள்ளது. அது யாதெனில் கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், அர்ஜெண்டினா அணியின் கேப்டனுமான மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை இதுதான். இந்த விஷயத்தை அவரே அறிவித்துள்ளார். உலகக்கோப்பையில் களமிறங்கும் அர்ஜெண்டினா அணி சிறந்த பார்மில் உள்ளது. கடைசி 35 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காமல் 24 வெற்றிகள், 11 சமநிலை என்ற நிலையில் உள்ளது. 1986க்குப் பிறகு சொல்லிக் கொள்ளும்படி எந்தவொரு பெரிய போட்டியிலும் வெல்லாமல் இருந்த அர்ஜெண்டினாவிற்கு இந்த முறை கோபா அமெரிக்கக் கோப்பையை வென்றது ஆறுதலாக அமைந்தது. மேலும் யூரோ-கோபா வெற்றியாளர்களின் போராட்டமான ‘பைனலிஸிமா’ போட்டியில் இத்தாலியை வீழ்த்தியதும் அவர்களுக்கு உற்சாகமளித்ததாகும். மேலும் லயனல் ஸ்க்லோனி என்ற சிறந்த பயிற்சியாளரின் வியூகங்களை சரியாகப் பயன்படுத்தி மெஸ்ஸி தனது கூட்டாளிகளின் ஒத்து ழைப்புடன் உலகக் கோப்பையை முத்தமிட விரும்புகிறார்.