மகிழ்ச்சி தராத வெற்றி
இரு அணிகளின் அதிரடி ஆட் டம், ஒவ்வொரு நிமிடமும் பர பரப்பு, சண்டை, சச்சரவு என பல் வேறு சம்பவங்கள் அரங்கேறினால் தான் கிரிக்கெட் விளையாட்டை கண்டு களித்த மாதிரி ஒரு ரசனையான அனு பவம் இருக்கும். ஆனால் ஞாயிறன்று நடைபெற்ற ஆசியக்கோப்பை தொட ரின் இறுதி ஆட்டம் “உப்பு சப்பில்லா மல்” சுவாரஸ்யமின்றி நிறைவுபெற்றது. மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்க இந்திய வீரர் முகமது சிராஜின் சாதாரண பந்துவீச்சில் (பெரியளவு துல்லியமாக வீசவில்லை) இலங்கை பேட்டர்கள் சீட்டுக்கட்டாய் சரிந்தனர். 50 ஓவர்களை கொண்ட போட்டி வெறும் 50 ரன்களில் (வெறும் 15.2 ஓவர்களில்) நிறைவடைந்தது. தனிநபர் எடுக்க வேண்டிய அரைசதத்தை ஒட்டுமொத்த இலங்கை அணியே அரை சதத்துடன் (50 ரன்கள்) பெவிலியனில் இன்னிங்ஸ் ஓய்வெடுக்கச் சென்றது. 300 பந்துக்கு 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக மிக எளிதான இலக்கை நோக்கி விரட்டிய இந்திய அணி 37 பந்து களில் (6.1 ஓவர்கள்) வெற்றி இலக்கை எளிதாக எட்டி 8ஆவது முறையாக சாம்பியன் பட்டம்வென்றது. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றாலும், இந்திய ரசிகர்களுக்கு எவ்வித மகிழ்ச்சியை தரவில்லை. இந்திய வீரர்கள் கூட சாம்பியன் பட்டம் வென்ற தை போல் அல்லாமல் சாதாரண மாகவே இருந்தனர். மைதானம், மழை காரணம்? உலகில் பிரசித்திபெற்ற கிரிக்கெட் மைதானங்களில் முக்கியமானது ஆசியக் கோப்பை நடைபெற்ற இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானம். பேட்டிங், பந்துவீச்சு சரிசமமாக எடுபடும் இந்த மைதானம் மழை நீரால் மாற்றம் கண்டதா? இல்லை பராமரிப்பு காரண மாக மாற்றம் கண்டதா? என உறுதி யான காரணம் தெரியவில்லை என்றா லும், ஆசியக் கோப்பையின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றத்தில் மை தானத்தின் தன்மை இருந்தது. அதாவது 5ஆவது லீக் ஆட்டத்தில் பேட்டிங் பிட்ச்சாக இருக்கும் பிரேமதாசா மைதா னம், 6ஆவது லீக் ஆட்டத்தில் பந்து வீச்சு பிட்சாக மாறியது. அதே போல சுழற்சி முறையே இல்லாமல் ஒவ்வொரு நாளும் மைதானத்தின் தன்மை மாறி யது. இதன் எதிரொலிப்பே இறுதி ஆட்டத்தில் இலங்கை அணி பந்தை கணிக்க முடியாமல் 50 ரன்களில் சுருண்டது.
ஐரோப்பா கால்பந்து கிளப்பில் கோல் அடித்த இந்தியர்
வரலாற்றுச் சாதனை படைத்த மனிஷா கல்யாண்
கால்பந்து உலகில் முக்கிய மான தொடராக இருப்பது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஸ் லீக் (யுஇஎப்ஏ). இந்த தொடரில் விளை யாடுவதே மிகவும் கவுரவமான விஷ யம். கவுரவம் ஒருபக்கம் என்றாலும் கடினமான விஷயமும் உள்ளது. கார ணம் உலகின் ஒவ்வொரு மூலை முடுக் கில் இருந்தும் வீரர் - வீராங்கனை கள் யுஇஎப்ஏ கால்பந்து தொட ரில் களமிறங்குவார்கள். இதனால் லீக் ஆட்டங்கள் கூட இறுதி ஆட்டங்கள் போல சுவாரஸ்யமாக நடைபெறும். முக்கியமாக கால்பந்து உலகில் ஜொலிக்க மற்றும் தங்கள் நாட்டு தேசிய அணிக்காக உலகக்கோப்பை யில் அசத்த யுஇஎப்ஏ தொடர்தான் தொடக்க புள்ளியாக உள்ளது என்பதால் யுஇஎப்ஏ தொடர் கால்பந்து உலகின் அனைத்து காலங்களிலும் ஸ்டார் அந்தஸ்தை கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த யுஇஎப்ஏ மகளிர் பிரிவின் ஒரு லீக் ஆட்டத்தில் அப்பல்லோன் எப்சி (சைப்ரஸ் கிளப்) - சாமேக்ரெலா எப்சி (ஜார்ஜியா கிளப்) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அப்பல்லோன் எப்சி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், 3 கோல்களில் 2-வது கோலை இந்திய வீராங்கனை மனிஷா கல்யாண் அடித்து புதிய வரலாறு படைத்தார். கோலடித்தது மட்டுமல்லாமல் ஐரோப்பா கால்பந்து கிளப்பில் விளை யாடிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் மனிஷா கல்யான் பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது.
கடினஉழைப்பு
“நான் பெரும்பாலும் பயிற்சிக்காக முதல் ஆளாக களத்திற்கு செல்கிறேன். கடைசி ஆளாக வெளியேறுகிறேன். இது எனது கடின உழைப்புக்கு போதுமான சான்றாகும். அசைக்க முடியாத கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியால் யுஇஎப்ஏ தொடரில் கோலடித்தேன். ஆனாலும், நான் திருப்தியடையவில்லை, நான் ஓய்வெடுக்கப் போவதில்லை. இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.
யுஇஎப்ஏ முதல் கோல் குறித்து மனிஷா கல்யாண்
தெரிந்துகொள்வோம்...
எளிதில் புரியாத விளையாட்டு
விளையாட்டு உலகில் எளிதில் புரியாத அளவிற்கு பல்வேறு விளையாட்டுகள் உள்ளது. அதில் முதன்மையானது அமெரிக்க பிராந்தி யத்தில் விளையாடும் பேஸ் பால் (BASE BALL) ஆகும். இந்த விளையாட்டு எளிதில் புரியாது. குறைந்தபட்சம் 3 போட்டிகள் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் புரியும். கிரிக்கெட் விளையாட்டை போன்று பந்தை அடித்து ஓடுவது மட்டும் ஓரளவு புரியும். ஆனால் யார் ஆட்டமிழக்கிறார்கள். யார் வெளியே செல்கிறார்கள். என்ன முறையில் புள்ளி வழங்கப்படுகிறது, வெளியில் பந்து சென்றால் ஒரு வீரர் காணாமல் போகிறார் என பலத்த சந்தேகம் உருவாகும். இதனாலேயே விளையாட்டு உலகில் பேஸ் பால் பெரிய புதிரான விளையாட்டாக உள்ளது. இந்த விளையாட்டில் அமெரிக்கா கொடி கட்டிப்பறக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.