ஆசியக்கோப்பைக்கு இந்தியா வரவில்லையென்றால் உலகக்கோப்பைக்கு நாங்களும் வரமாட்டோம்
பாகிஸ்தான் எச்சரிக்கை
நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31 அன்று பாகிஸ்தான் நாட்டில் தொடங்குகிறது. ஆனால் இந்திய அணி பாதுகாப்பு பிரச்சனையை கார ணம் காட்டி பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்த நிலையில், இலங்கை நாட்டில் இந்திய அணி விளையாடும் போட்டி யை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு பாகிஸ்தான் விளையாட்டுத் துறை அமைச்சர் எஹ்சான் மசாரி கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறிய தாவது, “ஆசியக் கோப்பை போட்டி களை நடுநிலையான இடத்தில் நடத்த இந்தியா விருப்பம் காட்டினால், உல கக் கோப்பையிலும் அதையே கோரு வோம்” என்று கூறியுள்ளார். அதாவது இந்தியா பாகிஸ்தான் வர மறுத்தால், நாங்களும் இந்தியா வர மறுப்போம் எனக் கூறியுள்ளார். எஹ்சான் மசாரி பாகிஸ்தான் அரசின் ஒரு அங்கம் என்பதால் அவருடைய கருத்து பாகிஸ்தான் அரசின் கருத்தாகவே பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பைக்கு முன்னரே ஆசியக்கோப்பை நடைபெற உள்ள தால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என சினிமா போல கிளைமேக்ஸ் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தரவரிசை இல்லாமல் மிரட்டும் சுவிட்டோலினா
பாரம்பரியமிக்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் தொடரில் 4-வது சுற்றுகள் (ஒற்றையர் பிரிவு) நிறைவு பெற்றன. மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் உக்ரைனின் சுவிட்டோலினா, பெலாரஸ் வீராங்கனையும், டென்னிஸ் உலகில் அதிரடிக்கு பெயர் பெற்ற வீராங்கனையுமான அசரென்காவை 2-6, 6-4, 7-6 (11-9) என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நடப்பு சீசனில் சுவிட்டோலினா தரவரிசை இல்லாமல் களமிறங்கியவர். அசரென்கா 19-வது இடத்தில் உள்ளார். அதுவும் அசரென்கா அதிக அனுபவம், ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றிய அனுபவம் கொண்டவர். அவரை எவ்வித சாம்பியன் பின்புலம் இல்லாமல் அசால்ட்டாக வீழ்த்தியுள்ளார் சுவிட்டோலினா. சுவிட்டோலினா கடந்த 2019 விம்பிள்டன் தொடர் வரை முன்னேறி அசத்தினார். அதன் பிறகு பார்ம், காயம், போர் உள்ளிட்ட பிரச்சனைகளால் சரிவர டென்னிஸ் தொடர்களில் விளையாடாமல் இருந்த நிலையில், தற்போது தரவரிசை இல்லாமல் மிரட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விம்பிள்டனில் இன்று...
ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவில்
காலிறுதி ஆட்டங்கள்
ஆடவர், மகளிர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் 3-வது சுற்று ஆட்டங்கள்
டிஎன்பிஎல் 2023
நாளை இறுதி ஆட்டம்
இடம் : இந்தியா சிமெண்ட் மைதானம், திருநெல்வேலி
நேரம் : இரவு 7:15 மணி
இந்தியா சிமெண்ட் மைதானம் செல்வது எப்படி?
திருநெல்வேலி - மதுரை சாலையில் உள்ளது இந்தியா சிமெண்ட் மைதானம். அதாவது திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை பைபாஸில் 13 கிமீ (சங்கர் நகர்)முன்னரே உள்ளது.