வியாழன், செப்டம்பர் 23, 2021

games

img

அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் டி20 போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நடப்பாண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் 2021 சீசன் போட்டிகள் பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தொடரின் விடுபட்ட போட்டிகள் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி துவங்கி அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. இதுவரை இந்தியாவில் 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில், எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆடுகளங்களில் நடைபெறவுள்ளது.

இதனை தொடர்ந்து, வரும் சனிக்கிழமை துபாயில் நடைபெற இருக்கும் சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் இடையிலான போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனை ஐபிஎல் நிர்வாகம் முறைப்படி அறிவித்துள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருக்கும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை www.iplt20.com மற்றும் PlatinumList.net என்ற இணையதளத்திலும் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் தொடர் நிறைவடைந்ததும் அமீரகம் மற்றும் ஓமனில் உலகக் கோப்பை டி20 நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

;