இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு ராணுவ பாதுகாப்பு அளிக்க வேண்டும்
பாகிஸ்தான் அரசுக்கு முன்னாள் வீரர் எச்சரிக்கை
மினி கிரிக்கெட் உலகக்கோப்பை என அழைக்கப்படும் சாம்பிய ன்ஸ் டிராபி தொடர் அடுத்தாண்டு பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுகிறது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் சிக்கலின்றி நடைபெற வேண்டு மானால், அதற்குமுன் பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் நாடுகளைச் சேர்ந்த வீரர் களுக்கு ராணுவத்திற்கு நிகராக பாது காப்பு வழங்க வேண்டும் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாசித் அலி அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள் பாகிஸ்தான் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளன. சாம்பி யன்ஸ் டிராபிக்கு முன்னதாக நடக்கும் இந்த தொடர்களில் ஏதேனும் தவறு நடந்தால் சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ் தானில் நடக்காது. பலூசிஸ்தான் மற்றும் பெஷாவரில் நடைபெற்ற தாக்கு தலில் பாகிஸ்தான் வீரர்கள் உயிரி ழந்துள்ளனர். அதற்கு என்ன காரணம் என்பதை அரசு மட்டுமே அறியும். இதனால் அடுத்து வரும் தொடர்களில் ஒரு சிறிய பாதுகாப்பு குறைபாடு கூட ஏற்பட்டு விடக்கூடாது. பாகிஸ்தான் வரும் அணிகளுக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு அளிக்கும் உச்சபட்ச பாதுகாப்பை அளிக்க வேண்டும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மீண்டும் பார்மில் கரீபியன்கள்
தென் ஆப்பிரிக்காவை திணறடித்த மேற்கு இந்தியத் தீவுகள்
2 டெஸ்ட், 3 டி-20 என இரண்டு வித மான போட்டிகளை கொண்ட தொட ரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்க அணி, மேற்கு இந்தியத் தீவுகள் நாட்டி ற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் ளது. கடந்த வாரம் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 15 அன்று தொடங்கியது.
கயானாவில் நடைபெற்ற இந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி மேற்கு இந்தியத் தீவுகளின் அபார பந்து வீச்சால் முதல் இன்னிங்ஸில் வெறும் 160 ரன்களில் சுருண்டது. மிரட்டல் வேகத்தின் மூலம் தென் ஆப்பிரிக்கா வும் பதிலடி கொடுத்த நிலையில், மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் சற்று சுதாரித்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா அணி 80.4 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்து, மேற்கு இந்தியத் தீவு களுக்கு 262 ரன்கள் வெற்றி இலக் காக நிர்ணயம் செய்தது. முதல் இன்னி ங்ஸை விட 2ஆவது இன்னிங்ஸில் ஓர ளவு திடமான ஆட்டத்தை வெளிப் படுத்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றிக்காக கடுமையாக போராடி யது. எனினும் போதுமான அளவு விக்கெட் கையிருப்பில் இல்லாத நிலை யில், 66.2 ஓவர்களில் 222 ரன் களுக்கு ஆட்டமிழந்து 40 ரன்கள் வித்தி யாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் தோற்றலும், அந்த அணியின் ஆட்டத்திறன் கடந்த காலங்களை விட சற்று மேம்பட்டுள்ளது. அதாவது லாரா, சர்வான், பிராவோ காலத்து கரீபியன் (தீவு) அணிகளைப் போன்று மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள்.
டிரெண்டிங் வாய்ஸ்
நடராஜன்-அஸ்வின் மோதல் துலீப் டிராபியில் நடராஜனுக்கு இடம் தரக்கூடாது
“துலீப் டிராபி என்பது இந்திய டெஸ்ட் அணிக்கான வீரர்களை தயார் செய்வதற்காக நடத்தப்படுவதாகும். என்னை பொறுத்தவரை தமிழ்நாடு வீரர் நடராஜன் மிகச்சிறந்த ஒயிட் பால் கிரிக்கெட் வீரர். கடந்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் கடைசியாக 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் தான் விளையாடினார். கடந்த 3 ஆண்டுகளாகவே ரஞ்சி டிராபி, முதல்தர போட்டிகளில் நடராஜன் பங்கேற்கவில்லை. அவர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படவிருந்த போது, காயம் ஏற்பட்டது. நிச்சயம் அவருக்கு நமது ஆதரவு எப்போதும் இருக்கும். எனக்கும் நடராஜனை மிகவும் பிடிக்கும். மிகச்சிறந்த வீரர், மனிதர். ஆனால் ஏதோ சொல்ல வேண்டும் என்று சொல்லக் கூடாது. ஒருவேளை நடராஜன் ரெட் பால் கிரிக்கெட் விளையாடி தமிழ்நாடு அணிக்குள் வந்திருந்தால், நானே நடராஜனுக்காக பேசியிருப்பேன்” என இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறினார்.