games

img

2-வது அரையிறுதியில் ரஷ்யா - ஜெர்மனி மோதல்

சர்வதேச அளவில் நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் நடப்பாண்டு சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், ஸ்பெயின் நாட்டின் தலை நகரான மாட்ரிட் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  முதல் அரையிறுதியில் குரோஷியா - செர்பியா ஆகிய அணிகள் விளையாடி வரும்  நிலையில், சனியன்று நடைபெறும் 2-வது அரையிறுதியில் ரஷ்யா - ஜெர்மனி ஆகிய அணிகள் மோதுகின்றன.

ஆருடத்திற்கு வேலை இல்லை

கடினமான ஆடுகளங்களில் டேவிஸ்  கோப்பை நடைபெறுவதால் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களை போன்று  இந்த நாடு, இந்த நபர் தான் வெற்றி பெறு வார் என துடிப்பாக கணிக்க முடியாது. டாப்  100 தரவரிசையில் இருக்கும் வீரர், டாப் 10-இல் இருக்கும் வீரரை வீழ்த்தும் அதிசயங்கள் அதிகமாக நடக்கும் என்பதால் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஆரு டத்திற்கு வேலை இல்லை. 
 

;