games

img

ஹாட் ஸ்டாரில் சென்னை அணி ஆட்டத்திற்கு கிராக்கி

நடப்பு சீசன் ஐபிஎல் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள் மூலம் தொலைக்காட்சிகளில் ரசிக்கலாம். இதுபோக ஹாட் ஸ்டார் & டிஸ்னி மூலமும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதற்கு 3,6,12 மாத சந்தாக்கள் உள்ளன. அதற்குரிய கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தினால் ஐபிஎல், சீரியல், திரைப்படங் கள் உள்ளிட்டவைகளை காணலாம்.  தற்போதைய சூழ்நிலையில் ஹாட் ஸ்டாரில் ஐபிஎல் தொடருக்காக அதிகம் செலவிடப்படுகிறது. முக்கியமாக சென்னை, மும்பை அணி ஆட்டங்களை அதிகளவு ரசிகர்கள் ஹாட் ஸ்டாரில் ரசிக்கின்றனர். இதில் சென்னை அணி டாப் ஆர்டரில் உள்ளது. சென்னை அணி விளையாடும் ஆட்டங்களை 70 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பார்க்கின்றனர். மும்பை அணி ஆட்டத்தை 56 லட்சத்திற்கு அதிகமான ரசிகர்கள் ரசிக்கின்றனர். மற்ற அணிகளின் ஆட்டங்கள் 50 லட்சத்திற்கு கீழ் தான்.

ஐபிஎல் 
இன்றைய ஆட்டங்கள் 
மும்பை - லக்னோ 
(26-வது லீக்)
இடம் : பிராபோர்ன் மைதானம், மும்பை
நேரம் : 
மதியம் 3:30 மணி
 

தில்லி - பெங்களூரு (27-வது லீக்)
இடம் : வான்கடே மைதானம், மும்பை
நேரம் : இரவு 7:30 மணி