games

img

"பாக்சிங் டே" டெஸ்ட்... ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்த இந்திய அணி... 

மெல்போர்ன் 
ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 4 போட்டிகளை டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் டிச., 26 அன்று தொடங்கியது. "பாக்சிங் டே" டெஸ்ட் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. 

காயத்தால் விலகிய கோலிக்கு பதிலாக இந்திய அணியை ரஹானே வழிநடத்தினார். இந்திய அணி வீரர்களின் அசத்தலான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தொடக்கம் முதலே திணறிய  ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 195 ரன்களுக்கு  ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி கேப்டன் ரஹானேவின் (112) அசத்தலான ஆட்டத்தால் 326 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 

131 ரன்கள் பின்னலையுடன் தனது 2-வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி வழக்கம் போல திணறியது. அனுபவ வீரர் வாடே (40), கிரீன்  (45) ஓரளவு தாக்குப்பிடிக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஆஸ்திரேலிய அணி 103.1 ஓவர்களில் 200 ரன்களுக்கு  ஆட்டமிழந்தது. 

69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி (70 ரன்கள்)  15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து அபார வெற்றி பெற்றது.  இதன் மூலம் இந்திய அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமனில் நிறுத்தியது. 
3-வது ஒருநாள் போட்டி சிட்னியில் வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி தொடங்குகிறது.