பார்டர் - காவஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதபாத்தில் வியாழன்று தொடங்கியது. இந்த போட்டியை இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி தொடங்கி வைத்தனர். போதுவாக டெஸ்ட் போட்டியில் முதல் 2 நாட்கள் கூட்டம் அவ்வளவாக இருக்காது. 3-வது நாளுக்கு பிறகு போட்டியின் நிலைமையை பொறுத்து ரசிகர்கள் டிக்கெட் எடுத்து மைதானத்திற்கு வருவார்கள். இதுதான் டெஸ்ட் போட்டிகளின் பொதுவான நிலைமை. ஆனால் அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் மைதானமே நிரம்பியது. இது ஆச்சர்யம் அளிக்கும் விஷயமாக இருந்தாலும், வியாழனன்று மதியம் அதாவது இருநாட்டு பிரதமர்கள் கிளப்பிய பின்னர் 70% அளவில் மைதானம் வெறிச்சோடியது. அதன்பிறகு “தி வயர்” உள்ளிட்ட சில ஆங்கில செய்தி நிறுவனங்கள் பிரதமர் மோடி வருகைக்காக பாஜக கட்சியினருக்கு இலவச டிக்கெட் மூலம் அகமதாபாத் மைதானம் நிரப்பப்பட்டதாக செய்தி வெளியிட்ட நிலையில், அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் 2-ஆம் நாளில் மைதானம் முற்றிலும் வெறிச்சோடியது. 20% ஆஸ்திரேலியர்கள் மட்டுமே இருந்தனர்.
இலவச டிக்கெட் - அமித்ஷா மகன்
பிரதமர் மோடி வரு கைக்காக பாஜக கட்சியினருக்கு இலவச டிக்கெட் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவ காரத்தில் ஒன்றிய பாஜக அமைச்சர் அமித் ஷா மகனும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷாவின் பரிந்துரை பேரில் இலவச டிக்கெட் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி யது. பொதுவாக பள்ளி, கல்லூரி மாணவர் களுக்காக டெஸ்ட் போட்டிகளில் இலவச அனு மதி வழங்கப்படும். ஆனால் தற்பொழுது அரசி யல் கட்சியினருக்கு டிக்கெட் தரும் நிலைமை உருவாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.