games

img

விளையாட்டு செய்திகள்

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் - 2024

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஆப்கானிஸ்தான்

அதிர்ச்சி கலந்த உலகக் கோப்பை தொடராக 9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடர் நகர்ந்து வருகிறது. காரணம் இளம் அணிகளின் அசத்தலான ஆட்டத்தால் பலம் வாய்ந்த சாம்பியன் மற்றும் அதிரடிக்கு பெயர் பெற்ற நட்சத்திர அணிகளான இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 3 அணிகள் லீக் சுற்றோடு வெளியேறின. 

அதன்பிறகு கடந்த 4 நாட்களாக உலகக்கோப்பை டி-20 தொடரில் எவ்வித அதிர்ச்சி சம்பவங்களும் அரங்கேறாத நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று பிரம்மாண்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறி யுள்ளது. ஞாயிறன்று காலை நடைபெற்ற 8ஆவது “சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியா, இளம் அணியான ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய  ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய கூடிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 100 ரன்னை கடப்பதற்குள் மிடில் ஆர்டரை (85-5) இழந்தது. மேக்ஸ்வெல் (59) மட்டும் தனி ஒருவராக போராட பின்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். மேக்ஸ்வெல் ஆட்டமிழந்த அடுத்த சில நிமிடங்களில் ஆஸ்திரேலிய அணியின் ஒட்டுமொத்த இன்னிங்ஸும் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடந்த 2021இல் துபாயில் நடைபெற்ற உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை சாம்பியன் அந்தஸ்து இல்லாத இளம் அணியான ஆப்கானிஸ்தான் வீழ்த்தி இருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

களத்தில் இன்று....

களத்தில் இன்று....
உலகக்கோப்பை டி-20 
மேற்கு இந்தியத் தீவுகள் - தென் ஆப்பிரிக்கா
இடம் : ஆன்டிகுவா, மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6:00 மணி
*
இந்தியா - ஆஸ்திரேலியா
இடம் : லூசியா, 
மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : இரவு 8:00 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)
கோபா - 2024
உருகுவே - பனாமா 
நேரம் : காலை 6:30 மணி
இடம் : மியாமி, அமெரிக்கா
*
அமெரிக்கா - பொலிவியா
நேரம் : : செவ்வாயன்று அதிகாலை 3:30 மணி
இடம் : ஹூஸ்டன, அமெரிக்கா
சேனல் : பிபா சேனல்

யூரோ - 2024
இன்று பகல், இரவு நேர 
ஆட்டங்கள் கிடையாது
(இந்திய நேரப்படி அதிகாலை 
12:30 மணிக்கு ஆட்டங்கள் இருப்பதால், இந்தியாவில் காணும் வகையில் திங்களன்று மாலை, இரவு நேரத்தில் நடைபெறும் வழக்கமான ஆட்டங்கள் கிடையாது)

ஐரோப்பிய கால்பந்து - 2024
பெல்ஜியம் அபார வெற்றி

ஞாயிறன்று அதிகாலை நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து தொடரின் 24ஆவது லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் - ருமேனியா அணிகள் மோதின. தனது  முதல் லீக் ஆட்டத்தில் இளம் அணியான  ஸ்லோவேக்கியா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டதால் ருமேனியா அணிக்கெதிரான ஆட்டத் தில் அதிரடி தாக்குதல் பாணி ஆட்டத்தை கையி லெடுத்த பெல்ஜியம் அணி ஆட்டத்தின் 2ஆவது நிமி டத்திலேயே கோலடித்து முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆக்ரோசமாக விளையாடிய  பெல்ஜியம் 79ஆவது மேலும் ஒரு கோலடித்து 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலை பெற்றது.

கோபா அமெரிக்கா -2024
வெனிசுலா, மெக்சிகோ அணிகள் வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா தொடரில் விடுமுறை நாளான ஞாயி றன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் வெனிசுலா - ஈகுவடார்  (குரூப் - பி)  அணிகள் மோதிய நிலையில், இந்த ஆட்டத்தில் வெனிசுலா  2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற் றது. அதே போல  2ஆவது ஆட்டத்தில் மெக்சிகோ -  மைக்கா (குரூப் - பி)  அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெக்சிகோ 1-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வெற்றி பெற்றது.