ஞாயிறன்று நடைபெற்ற ஆசி யக்கோப்பை தொடரின் “சூப்பர் 4” சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தி யாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது ரவி பிஷ்னோய் வீசிய 17.3 ஓவரில் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி கொடுத்த எளிய கேட்சை இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் தவறவிட்டது தான். ஆனால், “விளையாட்டுப் போட்டியின் அழுத்த மான சூழ்நிலையில் யார் வேண்டுமா னாலும் தவறு செய்ய வாய்ப்புள்ளது” என்ற வரலாறை கண்டுகொள்ளாமல் சமூக வலைத்தளங்களில் அர்ஷ்தீப் சிங் பற்றி அவதூறு கருத்துக்கள் வெளி யாகி வருகின்றன. இந்திய அணி நிர்வாகம், ஆடும் லெவனில் விளையாடிய முன்னாள் கேப்டன் கோலி, முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் கிரிக்கெட் விளையாட்டுப் பற்றி உண்மையான தெளிவு பெற்றவர்கள் அர்ஷ்தீப் சிங்கின் செயலை பொறுமையாக விளக்கி சமூக வலைத்தளங்களில் அவருக்கு ஆதரவான மற்றும் கடந்த கால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி வரு கின்றனர். முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஒரு படி மேலே சென்று தனது டுவிட்டர் முகப்பு படத்தை மாற்றி அர்ஷ்தீப் சிங் படத்தை வைத்து ஆதரவு அளித்துள்ளார். அர்ஷ்தீப் சிங் ஆதரவாக டுவிட்டர் பக்கத்தில் #IndiawithArshdeep, #istandwithArshdeep ஆகிய ஹேஸ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகிறது.