games

img

நாளை தொடங்கும் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் தொடர்  

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் நாளை தொடங்குகிறது.  

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2 டெஸ்ட் போட்டி தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது. இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (3 ஆம் தேதி) தொடங்குகிறது. 20 ஓவர் தொடர் மற்றும் முதல் டெஸ்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி நாளைய டெஸ்டில் விளையாடுகிறார். அதனால் இந்திய அணி பேட்டிங்கில் கூடுதல் பலத்துடன் காணப்படும்.