games

img

2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி  

நெதர்லாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.  

நெதர்லாந்து அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நெதர்லாந்து அணி-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டி20 போட்டி மழை காரணமாக ரத்தானது.

இதையடுத்து மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.  

அதனைதொடர்ந்து நெதர்லாந்து-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.    

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த 32 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. 16 ரன்கள் எடுத்த நிலையில் கிராண்ட்ஹோம் அவுட் ஆனார். இதனையடுத்து லேதம்-வுடன் பிரேஷ்வேல் ஜோடி சேர்ந்து விளையாடினார். நியூசிலாந்து அணி சார்பாக சிறப்பாக விளையாடிய டாம் லேதம் சதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டாம் லேதம் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நெதர்லாந்து தரப்பில் வான் பீக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  

அதனைதொடர்ந்து 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. இதில் 34.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நெதர்லாந்து அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.  

3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகுக்கிறது.  

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.