games

img

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி....  இந்திய அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி....   

சிட்னி 
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி-20, 4 டெஸ்ட் என மூன்று விதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்க ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் முதல் அம்சமான  3 போட்டிகளின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த நிலையில், 2- வது சிட்னி மைதானத்தில் இன்று நடைபெற்றது. 

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்து இந்திய அணியின் துடிப்பில்லாத பந்துவீச்சை வெளுத்தெடுத்தது. மிடில் ஆர்டர் வீரர்கள் அனைவரும் அரைசதமடிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் வாயடைத்து போயினர். கேப்டன் கோலி பல்வேறு வியூகம் வகுத்தாலும் ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. 

ஸ்டீவன் ஸ்மித்தின் (104) அசத்தலான சதத்தின் உதவியால் ஆஸ்திரேலிய அணி  50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு  389 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் ஷமி, பும்ரா, ஹர்திக் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஒரே தொடரில் ஆஸ்திரேலிய அணி 350 ரன்களுக்கு மேல் குவிப்பது இது இரண்டாவது முறையாகும். முதல் போட்டியில்  374 ரன்கள் குவித்தது. 

390 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் ஓரளவு ரன்கள் குவித்தாலும் ரன் மற்றும் பந்துக்கான விகிதத்தை குறைக்க முடியவில்லை. கேப்டன் கோலி ( 89), ராகுல் (76) ஆகியோர் ஓரளவு தாக்கு பிடிக்க மற்ற பேட்ஸ்மேன்கள் அரைசதத்தை கூட நெருங்க முடியாமல் பெவிலியன் திரும்பினார்கள். 

பின்வரிசை வழக்கம் போல சரிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் எடுத்து 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
3 போட்டிகளை கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற காணில் கைப்பற்றியதால் தொடரை கைப்பற்றியது. கடைசி ஒருநாள் போட்டி கான்பெராவில் டிசம்பர் மாதம் 2-ஆம் தேதி நடைபெறுகிறது.