games

img

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து 2023

சினிமா நடனம் கூட தோற்கும்

அனைத்து விளையாட்டுகளிலும் தனது ஆட்டத்தின் செயல்பாடுகள், விதிகளில் ஒருவித சிறப்புகள் இருக்கின்றன. ஆனால் மகளிர் கால்பந்தில் விளையாட்டு விதிகளை தவிர்த்து தனிச்சிறப்பு ஒன்று  உள்ளது. அது யாதெனில் கோல் அடிக்கப்படும் பொழுது கொண்டாடப்படும் விதம்தான். ஆட வர் கால்பந்து பிரிவில் ஆக்ரோஷம், ஆக்சன் ஸ்டைலில் வீரர்கள் கோல் வெற்றியை கொண்டாடுவார்கள். ஆனால் பெண்கள் நடனத்தில் கலக்குவார்கள். அவர்கள் ஆடும் நடனம் சினிமாவில் கடின பயிற்சி பெற்ற நடனத்தை கூட மிஞ்சிவிடும். அந்தளவுக்கு மிக அழகாக நடனம் ஆடுவார்கள். மகளிர் கால்பந்து ஆட்டத்தை காண செல்பவர்களை விட வீராங்கனைகளின் நடனத்தை காண செல்பவர்கள்தான் அதிகம்.

இன்றைய ஆட்டங்கள்

பிலிப்பைன்ஸ் - சுவிட்சர்லாந்து
நேரம் : காலை 10:30 மணிக்கு
இடம்:போர்சித் பார் மைதானம், டுனேடின் நியூசிலாந்து

ஸ்பெயின் - கோஸ்டாரிகா
நேரம் : மதியம் 1:00 மணிக்கு
இடம்:வெல்லிங்டன் மைதானம், நியூசிலாந்து

சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், பேன்கோடு (ஒடிடி)

அகமதாபாத்
2026 காமன்வெல்த் : அகமதாபாத்தில் நடத்தும் திட்டம் இல்லை
குஜராத் அரசு கைவிரிப்பு

23-வது காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டிகள் 2026 மார்ச் மாதம் 17 முதல் 29 வரை ஆஸ்தி ரேலியாவின் விக்டோரியா மாகா ணத்தில் உள்ள 5 நகரங்களில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நிதி நெருக்கடி பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்பாக 23-வது காமன்வெல்த் தொடரை நடத்த இயலாது என அதிரடியாக அறிவித்தது விக்டோரியா மாகாண அரசு. இந்த விவகாரம் பெரும் சர்ச்சை யை ஏற்படுத்தியது. காரணம் ஆஸ்திரேலியாவின் முக்கிய நிர்வாக வளர்ச்சி உள்ள மாகாணமான விக்டோரியாவிற்கு நிதிநெருக்கடி எனக் கூறுவது கடும் சந்தேகத்தை கிளப்பிய நிலையில், 2026 காமன் வெல்த் தொடரை குஜராத் மாநிலம் ஏலம் எடுக்கலாம் எனவும், அகமதபாத்தில் நடைபெறும் என தகவல் ஒன்று வெளியாகியது. ஆனால் இந்த தகவல் போலியானது என குஜராத் அரசு கூறியுள்ளது. இதுகுறித்து குஜராத் மாநில விளையாட்டு, இளைஞர் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் துறையின் துணைச் செயலர் (விளை யாட்டு) யு.ஏ.படேல் கூறியதாவது, “2036 ஒலிம்பிக்கிற்கான நடத்தும் உரிமையைப் பெறுவதே இப்போது எங்களின் கவனம். தற்போது வரை 2026 காமன்வெல்த் விளை யாட்டுகளுக்கு ஏலம் எடுப்பது குறித்து எங்கள் தரப்பிலிருந்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று கூறினார்.

களத்தில் இன்று...

இந்தியா - மே.இ.தீவுகள்
(2-ஆம் நாள் ஆட்டம்)
நேரம் : இரவு 7:30 மணி
இடம் : போர்ட் ஆப் ஸ்பெயின், டிரினிநாட்
சேனல் : தூர்தர்சன் ஸ்போர்ட்ஸ், ஜியோ சினிமா, பேன்கோடு

ஆஷஸ் (4-வது, 3-வது நாள்)

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து
நேரம் : மதியம் 3:30 மணி
இடம் : ஓல்ட் டிராபோர்ட், மான்செஸ்டர்
சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஒடிடி)