இன்று நியூசிலாந்து அணியுடன் மோதல்
15-வது சீசன் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியா வின் ஒடிஷா மாநிலத்தின் 2 நகரங்களில் (புவனேஸ்வர், ரூர்கேலா) நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று கிராஸ்-ஓவர் ஆட்டங்கள் தொடங்குகிறது. முதல் கிராஸ்-ஓவர் ஆட்டத் தில் மலேசியாவை ஸ்பெயின் அணி எதிர்கொள்கிறது. 2-வது ஆட்டத்தில் கோப்பை வெல்லும் அணியில் ஒன்றான இந்தியா, நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்து கிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றால் 24-ஆம் தேதி நடைபெறும் காலிறுதியில் பலமான பெல்ஜியம் அணி யுடன் மோதும்.
இன்றைய ஆட்டங்கள்
மலேசியா - ஸ்பெயின்
நேரம் : மாலை 4:00 மணி
இந்தியா - நியூசிலாந்து
நேரம் : இரவு 7:00 மணி
இரண்டு ஆட்டங்களும் புவனேஸ்வரில்...