ஒரே அணி... ஒரே ஆட்டமுறை... 2010 ஸ்டைலில் அசத்திய ஸ்பெயின்
ஆடவர் 2010 உலகக் கோப்பை தொடரில் (தென் ஆப்பிரிக்கா) சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்.
மகளிர் 2010 உலகக் கோப்பை தொடரில் (ஆஸ்திரேலியா) சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்.
விளையாட்டு உலகில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்ற 9-வது சீசன் மகளிர் உலகக்கோப்பை தொடர். காரணம் அனுபவம் இல்லாத அணிகள் கூட அசத்தலாக விளையாட லீக் ஆட்டம் முதல் இறுதி ஆட்டம் வரை ஒவ்வொரு ஆட்டமும் சுவாரஸ்யமாக நகர்ந்தது. ரசிகர்கள் கூட்டத்தால் ஆடவர் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை ஆஸ்திரேலியா, நியூ சிலாந்து நாடுகள் களைகட்டியது. ஞாயிறன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - இங்கிலாந்து அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம்வென்றது. ஸ்பெயின் மகளிர் அணி தனது ஆடவர் அணியை ஒப்பிடும் வகையிலும், ஒரு புதிய காலக்கோடு வரலாற்றை எடுத்துரைக்கும் நோக்கிலும் சாம்பி யன் பட்டம் வென்றது. அதாவது கடந்த 2010இல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஆடவர் உலகக்கோப்பை கால்பந்தில் ஸ்பெயின் அணி, நெதர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 2010 தொடர் முழுவதும் கோலடித்து தடுப்பாட்ட வியூகம் ஆட்டத்தை கையிலெடுத்து வெற்றி பெரும் ஆட்ட முறையை செயல்படுத்தி முதல்முறை யாக சாம்பியன் பட்டம் வென்றது. இதே பாணி ஆட்டமுறையைதான் நடப்பு சீசன் மகளிர் உலகக்கோப்பை தொடரில் ஸ்பெயின் அணி வெளிப் படுத்தி சாம்பியன் பட்டம் வென்று கலக்கியுள்ளது. ஒரே அணி (ஸ்பெயின்) ... ஒரே ஆட்டமுறை (கோலடித்து தடுப்பாட்டம்).. என 2010 ஸ்டைலில் 2023 கோப்பை வென்றுள்ளது ஸ்பெயின் மகளிர் அணி...
ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023
ஆசியக்கோப்பை தொடரின் 16-வது சீசன் வரும் ஆகஸ்ட் 30 அன்று பாகிஸ்தான், இலங்கையில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான வீரர்கள் பட்டியலை பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகள் அறிவித்திருந்த நிலையில், இந்திய அணியும் திங்களன்று வீரர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. வீரர்கள் பட்டியல்: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டயா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஜாஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி, இஷான் கிஷான், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், பிரசித் கிருஷ்ணா.
உசைன் போல்ட் சாதனைகளை நெருங்கும் நோவா லைல்ஸ்
ஒட்டப்பந்தயம் என்றால் முதலில் ஞாபத்துக்கு வருவது ஜமைக்காவின் உசைன் போல்ட்தான். பல்வேறு சாதனையுடன் 8 ஒலிம்பிக் தங்கம், 11 உலக தடகள சாம்பியன்ஷிப் தங்கம் என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 9.58 வினாடியில் (உலக தடகள சாம்பியன்ஷிப்) பந்தய தூரத்தை கடந்து உலகின் அதிவேக மனிதர் என்ற பட்டமும் உசைன் போல்ட் கைவசம் உள்ள நிலையில், உசைன் போல்ட் சாதனைகளை நெருங்கும் பாதையில் அமெரிக்க தடகள வீரர் நோவா லைல்ஸ் பயணித்து வருகிறார். இந்த பயணத்தின் தொடக்கப் புள்ளியாக ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் நோவா லைல்ஸ் 9.83 வினாடிகளில் தங்கப்பதக்கத்தை வென்றார். நோவா லைல்ஸுக்கு பெரியளவு அனுபவம் கிடையாது. அனுபவம் இல்லாமலேயே அசத்தலாக ஓட்டத்தில் பாய்வதால் விரைவில் உசைன் போல்ட் சாதனையை நெருங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.