games

img

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா 2022

விளையாட்டு உலகில் முதன்மையான திருவிழாவான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 22-வது சீசன் அரபு நாடான கத்தாரில் நடைபெற்று வருகிறது.

குரூப் “பி”

இன்றைய ஆட்டங்கள்

வேல்ஸ்  - ஈரான்

நேரம்: மதியம் 3:30 மணி இடம்: அஹமத் பின் அலி

இரு அணிகளுக்கு இது இரண்டாவது ஆட்டமாகும். வேல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் டிரா செய்தது. ஈரான் அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியிடம் வீழ்ந்தது.

குரூப் “ஏ”

கத்தார் - செனகல்

நேரம்: மாலை 6:30 மணி  இடம்: அல் துமமா

இரு அணிகளுக்கு இது இரண்டாவது ஆட்டமாகும். கத்தார் அணி தனது முதல் ஆட்டத்தில் ஈகுவடாரிடம் வீழ்ந்தது. செனகல் தனது முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி கண்டது.

குரூப் “ஏ”

நெதர்லாந்து - ஈகுவடார்

நேரம் : இரவு 9:30 மணி இடம் : கலீபா

இரண்டு அணிகளுக்கும் இது இரண்டாவது ஆட்டமாகும்.  முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி செனகலையும், ஈகுவடார் அணி கத்தாரையும் வீழ்த்தியது.

குரூப் “பி”

அமெரிக்கா - இங்கிலாந்து

நேரம்: நள்ளிரவு 12:30 (வெள்ளியன்று அதிகாலை)
இடம்: அல் பாயித்

இரு அணிகளுக்கும் இது இரண்டாவது ஆட்டமாகும். இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஈரானையும், அமெரிக்கா தனது முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியுடன் டிரா செய்தது.

அசத்தும் ஆசிய அணிகள்

கடந்த காலங்களை போல அல்லா மல் 22-வது சீசன் உலகக்கோப்பை  தொடக்கம் முதலே லீக் ஆட்டங்களில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கால்பந்து உலகில் பெரும்பாலும் சாம்பியன் அணிகள் ஆதிக்கம் செலுத்தும் பழங்கால வரலாறுகள் உள்ளன. அதிலும் முக்கிய வரலாறாக இருப்பது தென் அமெரிக்கா அல்லது ஐரோப்பா என இந்த 2 கண்டங்களைச் சேர்ந்த நாடுகள் தான் மாறி மாறி கோப்பையை வெல்லும். வட அமெரிக்கா, ஆப்பிரிக்க ஆகிய கண்டங் களைச் சேர்ந்த நாடுகள் நாக் அவுட், காலி றுதி வரை சென்று அதிர்ச்சி அளிக்கும். ஆசிய, ஆஸ்திரேலிய கண்ட அணிகளுக்கு அதிசய வாய்ப்பு, சில அதிர்ச்சிகளால் நாக் அவுட் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் தொடக்க ஆட்டங்களில் சொல்லிக்கொள் ளும் அளவிற்கு பெரியளவு சோபிக் காது. ஆனால் நடப்பு சீசனில் தொடக்கத்தி லேயே சவூதி அரேபியா பலம் வாய்ந்த அர்ஜெண்டினாவையும், 4 முறை சாம்பி யன் ஆன ஜெர்மனியை 2-1 என்ற கணக்கில் ஜப்பான் அணியும் வீழ்த்தி நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரின் தொடக்கத்தி லேயே மற்ற ஆசிய அணிகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. 

உலகக்கோப்பையில் ஆசிய அணிகள்

1.ஜப்பான், 2.சவூதி அரேபியா, 3.கத்தார், 4.ஈரான், 5.தென் கொரியா, 6.ஆஸ்திரேலியா (உலகக்கோப்பை தொட ருக்கு மட்டும் ஆசிய கண்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது)

சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, ஜியோ சினிமா (ஓடிடி) இலவசமாக காணலாம்.

;