games

img

விளையாட்டு செய்திகள்

கோபா அமெரிக்கா - 2024
பிரேசில் அதிர்ச்சி தோல்வி ; அரையிறுதியில் உருகுவே

அமெரிக்காவில் நடைபெற்று வரும் 48ஆவது சீசன் கோபா அமெரிக்கா தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஞாயிறன்று அதிகாலை நடைபெற்ற 3ஆவது காலிறுதி ஆட்டத்தில் 9  முறை சாம்பியனான பிரேசில் அணி, 15 முறை சாம்பியனான உருகுவே அணியை எதிர்கொண்டது. இரு அணி களும் கோலடிப்பதை விட தடுப்பா ட்டத்தில் மட்டுமே அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது. இதனால் 90ஆவது நிமிடம் வரை இரு அணிகளும் கோல டிக்காத நிலையில், கூடுதல் நிமிடம் வழங்கப்பட்டது. கூடுதல் நிமிடத்தில் பிரேசில் அணிக்கு கிடைத்த பல்வேறு கோல் வாய்ப்புகளை அந்த அணி வீரர்கள் வீணடித்த நிலையில், கூடுதல் நிமிடமும் கோலின்றி 0-0 என்ற கணக்கில் சமனில் நிறைவடைந்தது.

இறுதியில் பெனால்டி சூட் அவுட் முறையில் கடைபிடிக்கப்பட்ட நிலையில், பரபரப்பாக நடைபெற்ற பெனால்டி சூட் அவுட்டில் உருகுவே 4-2  என்ற கோல் கணக்கில் திரீல் வெற்றி யுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.

படுமோசமாக  சொதப்பிய பிரேசில்

இந்த ஆட்டத்தில் உருகுவே அணி யை விட பிரேசில் கூடுதலான நேரத்தில்  பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தது. அதாவது 60 (பிரேசில்) : 40 (உருகுவே) என்ற விகிதத்தில் பந்து தனது கட்டுப்பாட்டில் இருந்தாலும் பிரேசில் அணி கோலடிக்காமல் சொதப்பியது பெரும் அதிர்ச்சி அலை யை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சீசனில் நூலிழையில் கோப்பையை நழுவ விட்ட பிரேசில் அணி இம்முறை கண்டி ப்பாக கோப்பையை வெல்லும் என அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பா ர்த்து இருந்தனர். ஆனால் காலிறுதி யுடன் பிரேசில் அணி வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பனாமாவை பந்தாடிய கொலம்பியா

கோபா அமெரிக்கா தொடரின் கடைசி காலிறுதி ஆட்டத்தில் கொலம்பியா - பனாமா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொலம்பியா அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிலையில், கொலம்பியா வீரர்களின் அதிரடி ஆட்டத்தை தாக்குபிடிக்க முடியாமல் பனாமா வீரர்கள் திக்கு திணறினர். ஆட்டநேர நேர முடிவில் 5-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை பந்தாடி கொலம்பியா அரையிறுதிக்கு முன்னேறியது.

பெர்லின்
ஐரோப்பிய கால்பந்து - 2024
இங்கிலாந்து, நெதர்லாந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் 17ஆவது சீசன் ஐரோ ப்பிய கால்பந்து தொடர் தற்போது  இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனியன்று இரவு நடைபெற்ற 3ஆவது காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. 

முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்காத நிலையில், ஆட்டத்தின் 75ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் எம்போலோ கோலடித்து அசத்தி னார். அடுத்த 5 நிமிட இடைவெளியில் இங்கிலாந்து வீரர் சாகா (80’) கோல டிக்க ஆட்டம் பரபரப்பானது. அதன்பிறகு 90ஆவது மற்றும் கூடுதல் நிமிடத்திலும் இரு அணிகளும் கோலடிக்காத நிலையில், இறுதியில் பெனால்டி சூட் அவுட் முறையில் கடை பிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட்டில் இங்கிலாந்து கோல் கீப்பர்  பிக்போர்ட்டின் அசத்தலான ஆட்டத் தால், அந்த அணி 5-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று 4ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

நெதர்லாந்து அபாரம்
ஐரோப்பிய கால்பந்து தொடரின் கடைசி காலிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - துருக்கி அணிகள் மோதின. ஆட்டத்தின் 35ஆவது நிமி டத்தில் துருக்கி வீரர் சமத் கோலடித் தார். அதன்பிறகு இரண்டாம் பாதி யின் 65ஆவது நிமிடம் வரை பதி லுக்கு நெதர்லாந்து கோலடிக்காத நிலையில், இந்த ஆட்டத்தில் துருக்கி எளிதாக வெற்றி பெற்று அரை யிறுதிக்கு முன்னேறும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் 70ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் ஸ்டீபன் கோலடித்தார். இதனால் இருநாட்டு ரசிகர்கள் இருக்கையில் அமராமல் நின்று கொண்டே போட்டியை பரபரப் பாக ரசித்து கொண்டு இருந்த நிலை யில், 75ஆவது நிமிடத்தில் முல்துர் (சேம் சைடு) கோலடித்தார். 
இதுவே ஆட்டத்தின் வெற்றி கோலாக அமைந்த நிலையில், நெதர் லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று 6ஆவது முறை யாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.