games

img

விளையாட்டு - புரோ கபடி 2023

புரோ கபடி 2023

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா தமிழ்நாடு?

10ஆவது சீசன் புரோ கபடி லீக் தொடரில் தற்பொழுது 4-ஆம் கட்ட லீக் ஆட்டங்கள் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்று வருகிறது. திங்களன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், முதல் ஆட்டத்தில் மேற்கு வங்கம் - தில்லி அணியும், 2-ஆவது ஆட்டத்தில் தமிழ்நாடு - ஹரியானா அணியும் மோதுகின்றன. நட்சத்திர அணிகளில் ஒன்றான தமிழ்நாடு அணி நடப்பு சீசனில் வெற்றியை குவிக்க முடியாமல் கடுமையாக திணறி வருகிறது. இதுவரை தான் 6 ஆட்டங்களில் 2 ஆட்டத்தில் மட்டும் வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன் 11-ஆவது இடத்தில் பின்தங்கி உள்ளது.  இந்நிலையில், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் தமிழ்நாடு அணி தனது 7-ஆவது லீக் ஆட்டத்தில் பலமான ஹரியானா அணியை எதிர்கொள்கிறது. சொந்த மண்ணில் வெற்றி பெற்று தமிழ்நாடு ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், வெற்றிப்படிகளில் காலடி வைத்து புள்ளிப்பட்டியிலில் மேல்நோக்கி முன்னேறும் முனைப்பில் தீவிர பயிற்சியிடன் களமிறங்குகிறது தமிழ்நாடு அணி.

இன்றைய ஆட்டங்கள்

மேற்கு வங்கம்  - தில்லி
(40-ஆவது லீக்)
நேரம் : இரவு 8 மணி

தமிழ்நாடு - ஹரியானா
(41-ஆவது லீக்)
நேரம் : இரவு 9 மணி

இடம் : நேரு மைதானம் (எஸ்டிஏடி), சென்னை (பெரியமேடு), தமிழ்நாடு. நேரடி முகவரி : ராஜாமுத்தையா சாலை, கண்ணப்பர் திடல், பெரியமேடு (சென்னை சென்ட்ரல்), சென்னை 600003. சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம் இல்லை, சந்தா கட்டணம் செலுத்தி இருந்தால் பார்க்கலாம்)

டிக்கெட்டுகள் பெற...

புரோ கபடி லீக் டிக்கெட்டுகள் பெற புக் மை ஷோ (BOOK MY SHOW) தளத்தில் பெறலாம். டிக்கெட்டுகள் பெற லிங்க் : https://in.bookmyshow.com/ (டிக்கெட் விலை ரூ.500 முதல் ரூ.6000 வரை நிர்ணயிக்கட்டுள்ளது)

இந்திய மகளிர் அணி அபாரம்

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி முதல்முறையாக அசத்தல்

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்றுவிதமான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதாக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.  இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா தலைநகர் மும்பை யில் உள்ள வான்கடே மைதானத்தில் வியாழனன்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 219 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 406 ரன்கள் குவித்த நிலையில், 187 ரன்கள் பின்னி லையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்தி ரேலிய அணி மீண்டும் சொதப்பலாக விளையாடி 261 ரன்களுக்கு அட்டமிழந்து வெற்றி இலக்காக 75 ரன்கள் நிர்ணயித்தது. மிக எளிய இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று,  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன்முறையாக ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியுள்ளது.  சமீபகாலமாக வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2 வாரங் குளுக்கு முன் இங்கிலாந்து மகளிர் அணியை வரலாற்று வெற்றியுடன் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மியாமி அணியில் சுவரேஸ்

கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், உக்ரைன் அணியின் முன்கள வீரருமான சுவரேஸ் ஐரோப்பா கிளப் அணியில் இருந்து விலகி பிரேசில் கிளப் அணியான கிரேமியோ கிளப் அணிக்கு விளையாடி வந்தார்.  இந்நிலையில், எவ்வித முன் அறிவிப்பின்றி திடீரென  அமெரிக்க கிளப் தொடரான மேஜர் லீக் தொடரில் இணைவதாக அறிவித்துள்ள நிலையில், அர்ஜெண்டினா கேப்டனும், கால்பந்து உலகின் நட்சத்திர வீரருமான மெஸ்ஸி விளையாடி வரும் இன்டர் மியாமி அணியில் இணைந்துள்ளார். மெஸ்ஸி - சுவ ரேஸ் ஏற்கெனவே ஸ்பெயின் கிளப் தொடரின் நட்சத்திர அணியான பார்சிலோனா அணியில் நீண்ட காலம் இணைந்து விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.