games

img

விளையாட்டு செய்திகள்

பிரிஸ்பேன் டென்னிஸ் 2024

ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் முன்னோட்ட தொடராக கருதப்படும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்  தொடர் டிசம்பர் 31 அன்று தொடங்கிய நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று இந்த தொடர் நிறைவுபெற்றது.

ரைபகினா சாம்பியன்
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் டென் னிஸ் உலகின் முதல்நிலை வீராங்கனையும், அதிரடிக்கு பெயர் பெற்ற பெலாரஸ் நாய கியுமான அரினா சபலென்கா, உலக தரவரிசையில் 2-ஆம் இடத்தில் உள்ள கஜகஸ் தானின் ரைபகினா உடன் மோதினார். தொடக்கம் முதலே ஆக்ரோஷத்தை கையிலெடுத்து மிரட்டிய ரைபகினாவின் அதி ரடியை துளியளவு கூட சமாளிக்க முடியாமல் சபலென்கா திணறிய நிலையில், 0-6, 3-6 என்ற செட் கணக்கில் ரைபகினா வெற்றி பெற்று கோப்பை யை கைப்பற்றினார்.

டிமிட்ரோவுக்கு கோப்பை
ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் டென்னிஸ்  உலகின் இரண்டாம் நிலை வீரரும்,  பல்கேரிய நாட்டவருமான டிமிட்ரோவ்,  உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள டென்மார்க்கின் ரூனேவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்றாலும் முதல் செட்டின் 4-ஆவது கேமிற்கு பிறகு டிமிட்ரோவ் திடீரென தாக்குதல் பாணி ஆட்டத்தை கையிலெடுக்க ரூனே  வெற்றிப் புள்ளிகளை குவிக்க முடியாமல் திணறினார். தொடர்ந்து டிமிட்ரோவின் ஆதிக்க நிலையை ரூனேவால் சமாளிக்க முடியாத நிலையில், இறுதியில் டிமிட்ரோவ் 7-6 (7-5), 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

கோலியை கொண்டாடும் தென் ஆப்பிரிக்க ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணி தென்  ஆப்பிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பய ணம் மேற்கொண்டு ஒருநாள், டி-20 தொடரை கைபற்றிய நிலையில், டெஸ்ட் தொடர் சமனானதால் தென்  ஆப்பிரிக்கா அணியுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது.  கடைசி டெஸ்ட் போட்டியில் தென்  ஆப்பிரிக்காவின் மூத்த வீரரும், கேப்ட னுமான டீன் எல்கர் ஒட்டுமொத்த சர்வ தேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற் றார்.

டீன் எல்கர் தனது கடைசி இன்னிங்சில் இந்திய வீரர் முகேஷ் குமார் பந்துவீச்சில் கோலியிடம் கேட்சா னார். அப்பொழுது கோலி இந்திய வீரர் களை கொண்டாட்டம் மேற்கொள்ள வேண்டாம் என்றும், டீன் எல்கரை வழியனுப்ப வேண்டும் என வேண்டு கோள் விடுத்தார். அதுவரை முகேஷ், ரோஹித், சிராஜ் ஆகியோர் விக்கெட் கொண்டாட்டத்தை ஆக்ரோஷமாக கொண்டாடிய நிலையில், கோலியின் வேண்டுகோளால் இந்திய வீரர்கள் அமைதியானார்கள்.  அதன்பின் இந்திய வீரர்கள் டீன் எல்கரை கைகொடுத்து வழி யனுப்ப, கோலி டீன் எல்கரை கட்டி யணைத்து விடைகொடுத்தார்.

போட்டி நிறைவு பெற்ற பின் இந்திய வீரர்கள் கையெழுத்திட்ட ஜெர்சியை எல்கரிடம் கொடுத்தனர். அவர் புன்னகையுடன் வாங்கி சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து விடைபெற்றார்.  இந்நிலையில், டீன் எல்கரின் விக்கெட் கொண்டாட்டத்தை தவிர்க்கு மாறு எடுத்துக்கூறிய கோலியை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி தென் ஆப்பிரிக்க ரசிகர்களும் கொண்டாடி வருகின்ற னர். இதுதொடர்பான வீடியோ இன்று வரை சமூக வலைத்தளத்தில் வைர லாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.