உலகின் முதன்மையான விளையாட்டுத் தொடரான ஒலிம்பிக் தொடரின்
33ஆவது சீசன் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.
மொத்த பதக்கத்தில் அமெரிக்கா ஆதிக்கம்
பாரீஸ் ஒலிம்பிக் தொடர் பதக்கப் பட்டியலின் முதல் 3 இடங்க ளில் ஜப்பான் (4 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் - மொத்தம் 7), தென் கொரியா (4 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் - மொத்தம் 7), ஆஸ்திரே லியா (4 தங்கம், 2 வெள்ளி - மொத்தம் 6) ஆகிய 3 நாடுகள் உள்ளன. இந்த 3 நாடுகளும் தங்கப்பதக்கத்தின் அடிப்ப டையில் முதல் 3 இடங்களில் உள்ள நிலையில், பதக்கப் பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ள அமெரிக்கா மொத்த பதக்க எண்ணிக்கையில் முத லிடத்தில் உள்ளது. அமெரிக்கா 3 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள் ளது. இன்னும் ஒன்றிரண்டு தங்கப்பதக் கத்தை மட்டும் வென்றால் அமெரிக் கா முதலிடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
12 நாடுகளுக்கு தங்கம் தங்கப்பட்டியலில் இடம்பெறாத பிரிட்டன்
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் 3ஆவது நாளான திங்களன்று மாலை நிலவரப்படி ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, இத்தாலி, கஜகஸ்தான், பெல்ஜியம், ஜெர்மனி, ஹாங்காங் (சீனா), உஸ்பெகிஸ்தான் ஆகிய 12 நாடுகள் தங்கப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தும் முக்கிய நாடான பிரிட்டன் இன்னும் தங்கப் பட்டியலில் இடம்பெற முடியா மல் தவியாய் தவித்து வருகிறது. திங்களன்று மாலை நிலவரப்படி பிரிட்டன் 2 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்களுடன் 13ஆவது இடத்தில் உள்ளது. பிரிட்டன் ஒரே நாடாக பங்கேற்கவில்லை. இங்கிலாந்து, ஸ்காட்லா ந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து என 4 நாடுகளாக ஒன்றிணைந்து களமிறங்கியும் பிரிட்டன் தங்கப்பட்டியலில் இன்னும் இடம்பெறாமல் தவிப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் ரீதியிலான கருத்து ஒலிம்பிக் வர்ணனையாளர் டிஸ்மிஸ்
மகளிர் 4x100 மீ ப்ரீஸ்டைல் நீச்சல் அணி பிரிவில் ஆஸ்திரேலிய நாடு தங்கப்பதக்கம் வென்றது. அப்போது ஒலிம்பிக் வர்ணனையாளர் குழுவில் இடம்பெற்ற பாப் பல்லார்ட் என்பவர் ஆஸ்திரேலிய மகளிர் அணியை மறைமுகமாக குறிப்பிட்டு,”பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து, மேக்கப் செய்து தங்கள் வேலையையும் கச்சிதமாக செய்துவிடுகிறார்கள்” என பாலியல் ரீதியாக பேசினார். பாப் பல்லார்ட்டின் இந்த பேச்சிற்கு பிரிட்டன் ஒலிம்பிக் சங்க அதிகாரிகள் உட்பட பல்வேறு நாடுகளின் அதிகாரி கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பெண்களுக்கு எதிராக இழிவான கருத் துக்களை தெரிவித்த பாப் பல்லார்ட் ஒலிம்பிக் வர்ணனையா ளர் டிஸ்மிஸ் செய்யப்படுவதாக பாரீஸ் ஒலிம்பிக் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
பதக்கப் பட்டியல்
1 ஜப்பான்
2 தென்கொரியா
3 ஆஸ்திரேலியா
4 அமெரிக்கா
5 பிரான்ஸ்
25 இந்தியா
தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
4 2 1 7
4 2 1 7
4 2 0 6
3 6 3 12
3 3 2 8
0 0 1 1
(இந்தியா 25ஆவது இடத்தில் உள்ளது)