இன்று நடைபெற இருந்த இந்தியா – தென் கொரியா அணிகள் மோதும் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
6வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டி தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் தங்களுக்குள் லீக் சுற்றில் மோதி வருகின்றன. இந்த லீக் சுற்று முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த இந்தியா – தென்கொரியா அணிகள் மோதும் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனை ஒருவருக்கு கோவிட் -19 உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கூடுதல் தகவல்கள் விரைவில் வழங்கப்படும் என ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.