“இரண்டாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 4.2 சதவீதம். பொருளாதாரம் மிகவும் கீழிறங்கி விட்டது. மன நிலை வீழ்ந்து விட்டது. மனோ தைரியம் கீழே இறங்கி விட்டது. மூன்றாவது காலண்டும் நல்லதாயிருக்குமென்று தெரியவில்லை. தயவு செய்து தலையிடுங்கள். ஆறுதலான ஸ்பரிசம் தேவையாக இருக்கிறது”
இப்படி மோடியிடமும், நிர்மலா சீதாரமனிடமும் ஒரு ட்வீட் வாயிலாகப் புலம்பியிருப்பது வேலையிழந்த தொழிலாளி அல்ல. தற்கொலை முடிவின் விளிம்பிலிருக்கும் விவசாயி அல்ல. வேலை தேடும் இளைஞர்கள் அல்ல.
மோகன்தாஸ் பய் என்கிற தொழிலதிபர்தான். இந்தப் பிரச்சினைகளையெல்லாம் குறித்து தேர்தலுக்கு முன் ஃபிரண்ட்லைன் கவர் ஸ்டோரி வெளியிட்ட போது, “பொய், பொய், அப்பட்டமான பொய். இது இடதுசாரிப் பிரச்சாரம்” என்று ட்வீட்டீயவரும் இவர்தான்.
மோகன்தாஸ் பய்யின் இன்று இட்டிருக்கும் புலம்பல் ட்வீட்டுக்கு ஒருவர் இப்படி பதில் ட்வீட் அனுப்பியிருக்கிறார்: “சார், இதையெல்லாம் நம்பாதீர்கள். இது இடதுசாரிகளின் பிரச்சாரம்.”
நம்ம லோக்கல் பொருளாதார அறிஞர்களின் அமைதி எனக்குப் பிடித்திருக்கிறது.
-