facebook-round

img

நெறியாளர்களுக்கு இடமில்லையா? நெறிகளுக்கு இடமில்லையா? -ஆர்.விஜயசங்கர்

ஒரு புதிய தொலைக்காட்சி சானலைத் தொடங்குபவர்கள் ஏற்கெனவே இருக்கும் சானல்களின் நெறியாளர்களின் பெயரைக் கிண்டலாகக் பெயரைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்வது கண்டனத்திற்குரியது. நண்பர் Gunaa Gunasekaran குரலை மங்கச் செய்வதும் நண்பர் Karthigaichelvan S அவர்களைப் பழைய தலைமுறையாக்குவதும், அசோக வர்ஷினிக்கு முற்றுப் புள்ளி வைப்பதும் புதிதாக வருபவர்களின் திறமையைப் பொறுத்தது. அதை விளம்பரத்தில் குறிப்பிடுவது பதட்டத்தின் அடையாளம்; நம்பிக்கையின் அடையாளம் அல்ல. அதுவும் தினமலரின் முதல் பக்கத்திலேயே வெளியிடுவது ’அவர்களது கட்சிக் காரர்களின்’ எரிச்சலின் வெளிப்பாடு.
பிரபல பத்திரிக்கையாளர் டி.என். நைனன் பிசினஸ் ஸ்டாண்டர் பத்திரிக்கையில் சேர்ந்த போது அப்பத்திரிக்கை ‘டி. என். நைனன் எங்களுடன் இருக்கிறார்’ என்று முழுப் பக்க விளம்பரம் செய்தது. அதுதான் நம்பிக்கை!
நெறியாளர்கள் இல்லாமல் சானல் நடத்துவது ‘குடியரசுக்காரர்களின்’ பாணியாக இருக்கலாம். ஆனால் அதை சத்தம் போட்டு விளம்பரம் செய்வது நெறியற்ற செயல்.

Vijayasankar Ramachandran

;