facebook-round

img

கம்யூனிசம்” கெட்டவார்த்தையா? - வீ .மீனாட்சி சுந்தரம்

‘வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா ‘கம்யூனிஸ்ட்’ என்ற சொல்லை விடுத்து, ‘சோஷலிஸ்ட்’ என்ற சொல்லைப் பொதுவுடைமை இயக்கத்தினர் சுவீகரித்துக்கொள்ளலாம் என்று சமீபத்தில் பரிந்துரைத்தார்”.( தமிழ் இந்து 23/அக்டோபர்2019- சமஸ் கட்டுரை)

கம்யூனிசம் கெட்டவார்த்தையல்ல , ஆகாச கோட்டையை காட்டி அங்கே செல்ல லாமென மக்களை ஏமாற்ற கூறப்படும் சொல்லும் அல்ல! அந்த சொல் ஒரு இயக்கத்தை குறிக்கிறது.

கம்யூனிசம் என்ற சொல்லை மார்க்ஸ் காலத்திலிருந்தே கெட்டவார்த்தையென சித்தரிப்பதில் ஆளும் வட்டாரம் கவணமாக இருந்து வருகிறது. சமூக அமைப்பில் இருப்பதை மாற்றி மேன்மைபடுத்தும் இயக்கம் என்ற பொருளில்தான் கம்யூனிசம் என்ற சொல்லை மார்க்சும் எங்கெல்சும் பயன்படுத்தினர்
.
சோசலிசம் என்பது முதலாளித்துவ சமூக உறவை மாற்றி உழைப்பை மையமாக கொண்ட சமூக உறவாகும் சோசலிசகட்டமைப்பிலும் பிரச்சினைகள் இருக்கும் அந்த பிரச்கினைகளை தீர்க்கிற கருவியே கம்யூனிசமாகும்

கம்யூனிசம் என்பது கற்பனையாக கட்டப்பட்ட சமூக கட்டமைப்பல்ல.. எந்த மார்க்சிச ஆசான்களும் ஆகாச கோட்டையை காட்டவில்லை அவரவர் காலத்தில் இருப்பதை மேன்மைபடுத்தும் அரசியல் இயக்கம் பற்றியே எழுதினர். சித்தாந்த போரை நடத்தினர்.

சந்தேகமிருந்தால் கற்பனா சோசலிசம் பற்றி எங் கெல்ஸ் எழுதியதை படியுங்கள். லெனின் எழுதியதையும் படியுங்கள்

சோசலிசம் பற்றி லெனின் ஒரு வரியில் எழுதுகிறார் நாகரீகமான ஒத்துழைப்பாளர்களை கொண்ட சமூக கட்டமைப்பு என்கிறார் ( சொசைட்டி ஆஃப் சிவிலைஸ்டு கோஆப்பிரேட்டர்ஸ்)

அந்த நாகரீகமான ஒத்துழைப்பாளர்களாக மானுடம் மாறாமல் சோசலிசம் நீடிக்க இயலாது

அத்தகைய பிறரோடு ஒத்துழைக்கும் புதிய நாகரீக மனிதனை உருவாக்குவதே கம்யூனிச இயக்கமாகும். வர்க்க போராட்டத்தின் மூலம் அதனை சாதிக்கின்றனர்.
லெனின் இரண்டு கற்பனை உலகுகள் (Two Utopias Volume 18, pages 355-359.) என்ற கட்டுரையில் குறிப்பிட்டபடி எந்த ஒரு நாட்டிலும் தரக்குறைவான கல்வியும், குறைவான சுதந்திரமும் வர்க்க போராட்டங்களுக்கு குறைவான வாய்ப்பும் உள்ளதோ அங்கு கற்பனா சோசலிச அரசியலுக்கு மக்கள் பலியாவர். . அதிலிருந்து விடுபடுவதற்கு வெகு காலம் பிடிக்கும் என்கிறார்..
. அத்தகைய தருணத்தில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உபதேசம் செய்ய பலர் முளைப்பர் என்பதையும் காணமுடிகிறது.. வர்க்க போராட்ட அணுகு முறையை கைவிட உபதேசிப்பார்கள் மறுபக்கம் கடந்தகால கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிழைகளை தொகுத்து பூச்சாண்டி ஆக்கி மக்களை பயமுறுத்துவார்கள். ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையின் ஈவிரக்கமற்ற சுரண்டல். தனி மனிதனை தற்காப்பு நிலைக்கு தள்ளிவிடும். மக்களை கம்யூனிச இயக்கத்தினை நோக்கி தள்ளிவிடும்..
(அடுத்து சோசலிசமும் – ஆசான்களும்)

-Meenatchi Sundaram