எங்கள் குழந்தையைக் கொன்று போட்டீர்கள்.குழந்தைகள் தினத்துக்கு சாதி,மதவெறியர்கள் எமக்களித்த பரிசு.உள்ளம் நடுங்குகிறது.எதிர்காலம் பற்றிய நினைப்பை அவசரமாகக் கதவடைத்து மூடுகிறோம்.கண்ணை மூடினால் இக்குழந்தையின் சிரித்த முகம் உள்ளுக்குள் வதைக்கிறது.இன்னும் எங்கள் செல்வங்கள் எத்தனை பேரை பலி வாங்கக் காத்திருக்கிறீர்கள்?
குற்ற உணர்வின் சுமை அதிகரிக்கிறது.பேயரசின் கீழ் இப்பிணந்திண்ணிகளின் ஆட்டம்.சுதர்சன் பத்மநாபன் ஒரு சங்கி என்பது ,ஐ ஐ டி யில் படிக்கும் நம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் கவலையையும் அதிகரிக்கிறது. ARREST THE MURDERER.
கொலையாளிகளைக்கைது செய்.செருப்புப் போடாமல் குரைப்பவர்(வழக்குரைப்பவர்)களை மீறி இந்த வழக்கிலாவது நமக்கு நியாயம் கிடைக்கப் போராடுவோம்.
துயர்மிகு குழந்தைகள் தினம். இவர்களிடமிருந்து எப்படிக்காப்போம் நம் கண்மணிகளை?