அத வாங்க பணம் இல்லாட்டா...
ஏர் இண்டியா, பாரத் பெட்ரோலியத்தை வித்தா ரூ ஒரு லட்சம் கோடி கிடைக்கும்: அரசு.
யாருகிட்ட அவ்வளவு பணம் இருக்கும்?: பொதுஜனம்.
இல்லாட்டி வங்கிகள் கடன் தரும்: அரசு.
அவங்களால கடன திருப்பி கட்ட முடியுமா?: பொதுஜனம்.
திருப்பி கட்டாட்டி பரவால்லை, அதை தள்ளுபடி பண்ணிடுவோம்: அரசு.
அப்ப அரசுக்கு ஒரு பைசாவும் கிடைக்கலையே!: பொதுஜனம்.
அதனால என்ன, பொதுதுறை நிறுவனங்கள வித்தாச்சுல: அரசு.
அப்ப இதுவொரு இலவச திட்டம்?: பொதுஜனம்.
இல்லை..இல்லை விலையில்லா திட்டம்: அரசு:
இது என்ன பித்தலாட்டமா இருக்கு!: பொதுஜனம்.
நிச்சயம் நீ ஆன்டி இண்டியன்தான்: அரசு.