பிரதமர் மோடி :- தேர்தல் நேரத்தில் பயங்க
ரவாதிகளைச் சுடலாமா என்று எதிர்க்கட்சி
கள் கேட்பார்கள்.
ச.சா - அப்படி யாரும் கேக்கல... ஆனா,
ராணுவத்துக்கு எப்புடி சுடணும்னு நாந்தான்
சொல்லிக் குடுத்தேன்னு சொல்லிராதீங்க..!!
_ _ _
மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹா
சன் :- தமிழகத்தின் மாற்றத்துக்கான விளிம்பில் உள்ளோம்.
ச.சா - பாஜக-அதிமுக ஆட்சிகள் அகற்றம்
தான் இப்போதைக்கு மாற்றம்!
_ _ _
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு:- புத்தரின் போதனைகளைப் பின்பற்றினால் அமைதியை நிலைநாட்டலாம்.
ச.சா - மெதுவாப் பேசுங்க... தேச விரோ
தின்னு சொல்லிரப் போறாங்க!
_ _ _
பீகார் முதல்வர் நிதீஷ்குமார் :- 2022க்குள்
விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க மோடி அரசு முயற்சித்தது.
ச.சா - 2019ல கிடைக்குற மாதிரி கொஞ்ச
மாவது உயர்த்திருக்கலாமே...?!?