facebook-round

img

பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு உயிர்கள் ஒன்றே

10 அரசுபள்ளிகளில் வேறு ஆய்வுகளுக்காக புள்ளிவிவரங்கள் சேகரித்தேன்.ஆச்சரியமாக 716 ஆண்களுக்கு 794 பெண்கள் இருக்கிறார்கள்.
சரி பாப்பம் என்று 10 தனியார் பள்ளிகளின் புள்ளிவிவரங்களையும்சேகரித்தேன் அதிர்ச்சியாக 618 ஆண்களுக்கு 416 பெண்கள்தான் இருக்கிறார்கள்.
அரசுபள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மிகவும் பிற்பட்ட சமூகங்களில் இருந்தே வருகிறார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் அப்பர்மிடில்கிளாஸ் & அப்பர்கிளாசில் இருந்தே வருகிறார்கள்.
எப்பவும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட ,மிகவும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு உயிர்கள் ஒன்றுதான். அதில் ஆண் 👨 பெண் 👸 பேதம் கிடையாது 

-Lakshmanasamy Odiyen Rangasamy