தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளம் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) அமைப்பை சட்டவிரோத இயக்கமாக அறிவித்து, உபா சட்டத்தின் கீழ் 5 ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இந்த தடை உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தது. அதே போல், பி.எஃப்.ஐ அமைப்பின் 8 இணை அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், பி.எஃப்.ஐ அமைப்பின் இணையதளம் மற்றும் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தள பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.