கார்த்தி நடிக்கும் படத்தின் கதை திப்புசுல்தான் வரலாறாக இருக்கலாம் என நினைத்து
அதன் படப்பிடிப்பில் கலகம் செய்திருக்கிறார்கள் சங்கிகள். திப்பு சுல்தான் மீது இவர்களுக்கு
ஏன் வெறுப்பு? அவர் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்து போராடியவர். இவர்க
ளுக்கும் சுதந்திர போராட்டத்திற்கும் சம்பந்தமேயில்லை. திப்புவை எதிர்ப்பது அவரோடு
சேர்ந்து போராடிய தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், மருதிருவர் ஆகியோரையும்
எதிர்ப்பது என்பதை இவர்கள் அறியவில்லை. இந்த தமிழினவிரோத சங்கிகளைத் தமிழர்கள்
அடையாளம் கண்டு கொள்ளட்டும்.