tamilnadu

img

படப்பிடிப்பு தளத்தில் விபத்து: கமல்ஹாசன், ஷங்கருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு

சென்னை:
இந்தியன்-2 படப்பிடிப்புத் தளத்தில் ராட்சத கிரேன் விழுந்து 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விபத்தை ஏற்படுத்தி தலைமறைவான கிரேன் ஆபரேட்டர் ராஜனை நசரத்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.விபத்து நிகழ்ந்த போது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கருக்கு சம்மன் அனுப்ப, வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெப்சி அறிவிப்பு
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே படப்பிடிப்பு தளத்தில் வேலை செய்வார்கள் என்று பெப்சி தலைவர் ஆ.கே.செல்வமணி அறிவித்துள்ளார்.