facebook-round

img

முன்னாள் ராணுவத்தினரை தொலை தூர பணியிடம் தந்து பந்தாடலாமா? - சு.வெங்கடேசன், எம்பி.,

தேசத்தை காத்தவர்களின் குடும்பங்களின் நலன் காப்பது பொதுத்துறை நிறுவனத்தின் கடமை அல்லவா?

முன்னாள் இராணுவத்தினரை தொலை தூர பணியிடம் தந்து பந்தாடலாமா?

யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 44 முன்னாள் ராணுவத்தினர் - அவர்களில் 14 பேர் மாற்றுத் திறனாளிகள் - தொலை தூர மையங்களுக்கு பணியிட உத்தரவு.

20 ஆண்டுகளுக்கும் மேலாக தேசத்தை பாதுகாத்தவர்கள். அவர்களின் ஊர்களுக்கு அருகில் பணியிடம் தரக் கோரி

பாதுகாப்பு அமைச்சர், நிதிச் சேவைத் துறை செயலர், யுனைடெட் இந்தியா சேர்மன் & நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.