“விதி கொடுத்த உதையால் அதிகாரத்திற்கு வந்தவர்கள் இன்று நம் கையில் மூவர்ணக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதனை இந்தியர்கள் எப்போதும் மதிக்க மாட்டார்கள். தம்முடையதாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மூன்று என்ற சொல்லே தீமையானது. மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடி மோசமான மனோரீதியான விளைவுகளை உண்டாக்கும். தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும்.”
இதை எழுதிய தேசவிரோதி யார் என்று தெரியுமா?
ஆகஸ்டு 14, 1947இல் இந்திய அரசியல் நிர்ணய சபை மூவர்ணக் கொடியாக அங்கீகரித்த போது ஆர் எஸ் எஸ்சின் அதிகார பூர்வ ஏடான ஆர்கனைசரில் வந்த கட்டுரையில்தான் இப்படி.
1990கள் வரை மூவர்ணக் கொடியை நாக்பூரில் இருக்கும் தன் தலைமையிடத்தில் ஏற்ற மறுத்த இயக்கத்தின் வாரிசுகள்தான் இன்று நமக்கு தேச பக்தி வகுப்பு எடுக்கிறார்கள்.
நேருவின் அமைச்சரவையில் இருந்த போதே ஜனசங்க ஸ்தாபகர் எஸ்.பி. முகர்ஜி தன் வீட்டிற்கு மேல் ஆர் எஸ் எஸ் கொடியைத்தான் பறக்க விட்டிருந்தார். நேரு இது குறித்து அவரிடம் கேட்ட போது அப்படி இல்லை, இரண்டு கொடிகளும் பறக்கின்றன என்று மழுப்பியவர் அவர்.