திருப்பதி ஏழுமலையான் தனது
திருமண செலவுகளுக்காக
குபேரனிடம் 14 லட்சம் ராமமுத்ரா
தங்க நாணயங்களை
கடனாக பெற்றிருக்கிறாராம்..
கலியுகத்தில் திருப்பித்தர
ஒப்பந்தத்துடன் வாங்கிய
அந்த கடனுக்கான வட்டியை
செலுத்திக்கொண்டிருக்கும்
வெங்கடேசப் பெருமாளின்
கடன் இன்னும் தீர்ந்தபாடில்லை..
கார்ப்பரேட்டுகளின் கடனில்
ரூ.14.57 லட்சம் கோடியை
கடந்த பத்து ஆண்டுகளில்
தள்ளுபடி செய்திருக்கிற
'ஆன்மீக அரசே'..
லட்டு உருட்டை நிறுத்திவிட்டு
கடவுளின் கடனையும் தீர்க்க
ஏதாவது வழி செய்வீர்களா..?
அவர்களுக்கு கடன்
நமக்கு கடவுள் எனும்
கண்கட்டு வித்தை....!!!
- ஆர்.பத்ரி , சிபிஐ(எம்) மாநிலக் குழு உறுப்பினர்