facebook-round

img

விஷ்வகுருவின் ஆட்சியில் சாமியாருக்கு தான் பாதுகாப்பு! - ஆர்.பத்ரி

பேராசிரியர் சாய்பாபா

போலியானதொரு

குற்றச்சாட்டினால் ஆயுள்

தண்டனை விதிக்கப்பட்டு

சிறையிலடைக்கப்பட்டார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு

பிறகு குற்றச்சாட்டில்

உண்மையில்லை எனும்

நீதிமன்ற தீர்ப்பின் மூலம்

விடுதலை செய்யப்பட்ட சில

நாட்களில் செத்துப் போனார்.

மாற்றுத்திறனாளியான அவர் சிறைக்காவலில் சிறுநீர் கழிக்கும்

வேளையிலும் கூட CCTV யால் கண்காணிக்கப்பட்டார்..

ஆனால்,

கொலைக்குற்றவாளியான

குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு

பாஜகவிற்காக பிரச்சாரம்

செய்வதற்காகவே 17 முறை

சிறைக்காவலில் இருந்து

பரோல் வழங்கப்பட்டது.

நூற்றுக்கு மேற்பட்டோரின்

மரணத்திற்கு காரணமான

போலேபாபாவின் பெயர் கூட

குற்றப்பத்திக்கையில்

குறிப்பிடப்படவில்லை..

ஈஷா மையம் ஜக்கியின்

'மர்மதேசத்தில்' ஆய்வு நடத்த

சென்ற அதிகாரிகளுக்கு

மாண்பமை உச்சநீதிமன்றம்

தடையை விதிக்கிறது.

இதுவரை ஏராளமானோர்

காணாமல் போனார்கள்

எனும் குற்றச்சாட்டுகள்

இருக்கும் சூழலில் தான்

மையத்திற்குள்ளேயே

ஒரு மின்மயானம் இருக்கிறது

எனும் செய்தி வெளியாகிறது..

விஷ்வகுருவின் ஆட்சியில்

சாமானியனாக இருப்பதைவிட

சாமியாராக இருப்பது தான்

மிகவும் பாதுகாப்பானது..!!

- ஆர்.பத்ரி, சிபிஎம்  மாநிலக் குழு உறுப்பினர்