facebook-round

img

இறுதி வெற்றி எங்களுக்கே....

பெட்ரோல், டீசல் விலையுயர்வு இந்துக்களுக்கல்ல..
டெல்லியில் போராடுவது விவசாயிகளே அல்ல..

நாங்கள் வெற்றி பெற்றது மக்களால் அல்ல !  
எங்கள் நியதி வேறானது...
எங்கள் சட்டம் உங்களுக்கானது அல்ல ! 
எங்கள் எஜமானர்களுக்கானது !!!

விவசாயி என்றால் கலப்பை பிடித்து நிலத்தில் உழ வேண்டும்..
கொடி பிடித்து போரடுவதல்ல..
உன்னை பார்க்க பிடிக்கவில்லை..
அதனால் பகலில் எனது குடும்ப நண்பர்களை பார்க்கிறேன்
இருளில் பார்க்கிறேன்..
உனது ஏர் கலப்பை 
எனது மாளிகையை வேரோடு பிடுங்குகிறது..
வேர்த்தெழுந்தேன்..
கனவு கலைந்துவிட்டது..

நடுங்கும் குளிரில்
வெப்பத்தை உருவாக்கும் தீ
எனது அறைவரை 
கனலாய் தகிக்கிறது...

தொழிலாளி என்றால் வாய் மூடி வேலை செய்வது. எட்டல்ல, பத்துமணி கூட,..
கூட்டு பேரம் உங்களுக்கல்ல..
எங்கள் முதலாளிகளுக்கானது..

சக்கரத்தை சுழற்றும் நீ
நாளை என்னையும் சுழற்றுவாய்...
அதனால் தான் திருத்திவிட்டேன்..
அறியாமையில் இருப்பவனை 
எப்போது மீட்டெடுப்பாய்..

உன்னால் முடியாது..
வர்க்கம் என்ற ஒற்றை சொல்..
நீ அறியாதவரை..
அடையாளத்தில் உன்னை
அமிழ்த்தியுள்ளேன்..

நாங்கள் தான் தேசம்..
அனைத்தும் ஒன்றே..
எதிர்ப்பில்லாமல் - இருப்பது
எங்கள் வேதம்..
அனைத்தும் ஒன்றே !..
நாடும், நானும்..

சுதந்திர சிந்தனை கொண்டாயோ !
எங்கள் வேதப் புத்தகத்தின் 
இரண்டாம் பக்கம் பிரிவு 4 ன் படி
நீ  தேசவிரோதி..
கூட்டம் சேர்த்துவாயோ ?
நீ தீவிரவாதி..

இதயமும், மூளையும்
இடதுபக்கம் இருப்பதால்..
பகுத்தறிவாயோ..
உன்னை இயக்கும் திரவம்..
இரத்தம் சிவப்பு நிறம் தானே..
உனது சிந்தனையும் அவ்வழிதானே !!
உனது இரத்த சிவப்பணுக்களை 
மாற்றி காலி(வி)யாக்கும் 
வித்தை அறிந்தவன் நான்தானே..

வெற்றியை சுவைக்கும்
வித்தைகள் தெரிந்த 
மாயஜால மோடி மன்னன்..
நானே.. நானே...
ஹ ஹ ஹ ஹ ஹ ஹஹ

ஏளனத்தில் சிரிப்பவனே
மதியிழந்த மோடிவித்தை மன்னா ? 
கதை சொல்கிறேன் கேட்டுக் கொள்..
பிழைக்க வந்தவனிடம் 
பெருந்தன்மை காட்டி 
அடிமைப்பட்டது ஆண்டு நானூறு..
விழித்த தாங்கள் அடித்தே விரட்டி 
களத்தில் நின்ற பரம்பரை நாங்கள்..

கைதட்டி, மணியடித்து, பூப்பொழிய
ஆணை கேட்டு நின்றதப்போ...
டிராக்டர் ஓட்டி, டெண்ட்டித்து
குளிர் எதிர்த்து,
பூபாளமே பார்த்து வியக்கும்
கோடிக்கால் பூதமாய்..
பட்டிக்காட்டிலிருந்து பட்டணம் நோக்கி..
நிறுத்திப் பார்.. முடிந்ததா ? 
புதிய புதிய சேனைகள் எங்களோடு...

உயிர் சிந்த சிந்த சிவப்பேறும்..
உனது காவியும் அடர் சிவப்பேறும்..
உன் மோடி வித்தையை
அறிந்தவர்கள் நாங்கள்..

சுரண்டி கொழுப்பவனின் ஏவளாளியே..
உழைப்பதென்பது எங்கள் கடமை..
மறத்துப் போன எங்கள் கையில்
உழைப்பவனின் ஆயுதமே..
குளத்தை கெடுக்கும் தாமரையே
அறிவால் கொண்டு வென்றிடுவோம்..

உலகை குலுக்கிய ஆரிய இட்லர்
சென்ற கதை உலகறியும்..
அந்த கதையை நீயும் அறிவாய்..

வர்க்கம் என்ற சொல்லை கண்டோம்..
அவனுக்காக களத்தில் நானும்
எனக்காக நிலத்தில் அவனும்
திசையறிந்து நிற்கிறோம்.. 
கிழக்கில் வானம் சிவக்கிறது..

சிவப்பென்பது எச்சரிக்கை
பயணப்படும் பாதையிலே..
நில்.. கவனி... செல்....
சாலை விதியை அறிந்து விட்டோம்..
இடதுபக்கம் செல்வதென்று..

சமூக விதியும் இதுதான் என்பதைக்
களத்தில் நாங்கள் கற்கின்றோம்...
ஏழு ஞாயிறு சென்றால் கூட
இறுதி வெற்றி எங்களுக்கே....
எங்களுக்காக மரணித்தவர்களே ! 
உங்கள் வழியில் நாங்கள் செல்வோம்..
இறுதி வெற்றியை அர்ப்பணிப்போம்...

- அரவிந்தன்..

;