கடன் தள்ளி வைப்பு காலத்தில் "வட்டிக்கு வட்டி" போடுவதை எதிர்த்து நான் 3-4-2020 அன்று நிதியமைச்சருக்கு கடிதம் எழுதினேன். பலரும் குரல் கொடுத்தனர். உச்ச நீதி மன்றத்திலும் வழக்கு வந்தது.
உச்ச நீதி மன்ற வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. அரசு இது குறித்து சமர்ப்பித்துள்ள திட்டத்தின் அடிப்படையில் ரூ 4300 கோடி 13.12 கோடிக்கும் அதிகமான கணக்குகளில் திரும்பச் செலுத்தப்பட்டுள்ளன.
கடன் வாங்கிய ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும், சிறு தொழில் புரிவோருக்கும் நெருக்கடி மிக்க காலத்தில் சிறு நிவாரணம்.
ஆரம்பத்திலேயே அரசு இதை செய்திருக்க வேண்டும். பேரிடர் காலத்தில் பெரிய மனசு வேண்டாமா?
இன்னும் மக்கள் துயர் துடைக்க அரசு செய்ய வேண்டியது ஏராளம். செய்யுமா?