election2021

img

அடுத்த கட்சியில் இருந்து வந்தால்தான் எம்எல்ஏ சீட்டா? சொந்த கட்சி அலுவலகத்தையே அடித்துச் சூறையாடிய பாஜகவினர்....

கொல்கத்தா:
அடுத்த கட்சிகளில் இருந்தவிலகிவந்து இணைந்தவர் களுக்கும், போனவாரம் புதிதாக கட்சியில் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே பாஜகவில்எம்எல்ஏ சீட் வழங்கப்படுவதாகவும், நீண்டகாலமாக உழைத்தவர்களுக்கு சீட் மறுக்கப்படுவதாகவும், நாடு முழுவதும் பாஜகவினர் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது.

வேட்பாளர் தேர்வு குறித்து, கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்படுவதில்லை; அனைத்து முடிவுகளும் எதேச்சதிகாரமான முறையில் எடுக்கப்படுகின்றன என்று உள்ளுக்குள் பொருமத் துவங்கியுள்ளனர். சிலர் பாஜகவிலிருந்து விலகவும் ஆரம்பித் துள்ளனர்.கொல்கத்தாவின் முன்னாள்மேயரும், பாஜக உறுப்பினருமான சோவன் சாட்டர்ஜி, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியில் பாஜகவை விட்டுவெளியேறினார். அசாம் மாநிலத்தில் அமைச்சராக இருந்தசுங் ரோங்காங் பாஜகவிலிருந்து விலகி, காங்கிரசில் சேர்ந்தார். வேறு சில மாநிலங்களிலும் இதே நிலைமைதான் உள்ளது.

இந்நிலையில்தான், பாஜகவில் நீண்டகாலமாக உழைத்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற ஆத்திரத்தில், மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் உள்ள பாஜக அலுவலகத்தை பாஜகவினரே அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் அரங் கேறியுள்ளது.

;