election2021

img

சனியன் பிடித்த ஆட்சி எப்போ ஒழியுமோ என அடுப்பில் நெருப்பை பற்ற வைக்கும் பெண்கள்....

கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர்தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளர் நாகைமாலி போட்டியிடுகிறார்.  கூட்டணி கட்சியின் தலைவர்கள் ஒவ்வொரு நாளும் அவருக்கு ஆதரவாக தொகுதியில்  பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.

வெள்ளிக்கிழமை மாலை சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் கீழ்வேளூர் தொகுதிக்குட்பட்ட ஒக்கூர் என்ற இடத்தில் பொதுமக்கள் மத்தியில் வாக்கு சேகரித்து பேசினார்.  மேலும் அந்தப்பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் துண்டு பிரசுரத்தை வழங்கி நாகைமாலிக்கு அரிவாள் சுத்தியல்சின்னத்தில் வாக்களிக்க வேண்டு மென கேட்டுக்கொண்டார். பின்னர் அவர் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், மூடப்பழக்க வழக்கம், சாதிய பாகுபாடுகளை விதைத்து  மக்கள் மத்தியில் கெடுபுத்தியை ஏற்படுத்தும் பாரதிய ஜனதாகட்சியை தமிழகத்தில் ஒரு போதும்காலூன்ற அனுமதிக்கக் கூடாது.தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடுகிறது. அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் மோடியின் படத்தை போட்டு வாக்கு கேட்க முடியாத சூழ்நிலையில் தான் மோடி உள்ளார்” என்று சாடினார்.

மேலும் “ஒரே மாதத்தில் சிலிண்டர் விலையை ரூ.125 ஏற்றியுள் ளார்கள். பெண்கள் அடுப்பை பற்றவைக்கும்போது சிலிண்டர் விலையை  நினைத்து இந்த சனியன் ஆட்சிஎப்போ ஒழியும் என்றுதான் நெருப்பைபற்ற வைக்கிறார்கள். சிலிண்டர் விலை ஏறும் போது வாய் திறக்காதஎடப்பாடி, தேர்தலுக்காக  6 சிலிண்டர் வழங்குவதாக  கூறியுள்ளது கூரை மீது ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் கதை போல் உள்ளது. அரசு ஊழியர்களின் பஞ்சப்படியை எடுத்து செலவு செய்துவிட்டு அதனை கேட்டு போராடும் ஊழியர்களை அடக்குமுறை செய்து கைது செய்யும் அரசுதான் எடப்பாடி அரசு.

அதேபோல் நாட்டில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுத்து இந்தியாவையே கபளீகரம் செய்யும் ஆட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. எனவே இவர்கள் போட்டியிடும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறக்கூடாது” என்றார். சிஐடியு நாகை மாவட்ட செயலாளர் தங்கமணி, மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் ரவீந்திரன், ஒக்கூர் பவர் பிளான்ட்பிரச்சாரத்தில் சிஐடியு நிர்வாகி சிந்தனைச் செல்வன், போக்குவரத்து தொழிற்சங்க சண்முகசுந்தரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டசிஐடியு நிர்வாகிகள்  மற்றும்பொதுமக்கள்  கலந்துகொண்டனர். இதனைதொடர்ந்து கோகூர்,கொளப்பாடு, சாட்டியக்குடி ஆகிய கிராமப்பகுதிகளில் இவர் பொதுமக்கள் மத்தியில் அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

;