election2021

img

மார்ச் 28 பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..... மு.க.ஸ்டாலின் - ராகுல்காந்தி - தலைவர்கள் பங்கேற்கிறார்கள்...

சென்னை;
தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல்6-ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. பிரச்சாரக் களம் தினமும் அனல்பறந்து வருகிறது. மதச்சார்பற்ற கூட்டணிகட்சி தலைவர்கள் அனைவரும் மாவட்டங்கள் தோறும் வாக்காளர்களை சந்தித்து வீதிவீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை வெளிவந்துள்ள அனைத்து கருத்துக் கணிப்புகளும் திமுக தலைமை யிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்து வருகின்றன.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின்மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று வரும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் மக்கள் கூட்டம் வெள்ளமெனத் திரண்டு வருகிறது.

அனல் பறந்து வரும் தேர்தல் பிரச்சாரக் களத்தில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் தொண்டர்களும் வீடு வீடாக வீதி வீதியாக கிராமம் கிராமமாக சென்று வாக்காளர்களை சந்தித்து தமிழகத்தில் சூழ்ந்திருக்கும் ஆபத்தை எடுத்துரைத்தும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும் அதிமுக - பாஜககூட்டணி இந்தத் தேர்தலுடன் துடைத்தெறியப்பட வேண்டியதன் அவசியத்தையும் விளக்கமாக பிரச்சாரம் செய்துவரு கின்றனர்.இதன் தொடர்ச்சியாக, சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை சீலநாயக்கன்பட்டியில் வருகிற ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்ட பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இந்தக் கூட்டத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் உரையாற்றுகின்றனர்.

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கி.வீரமணி, கே.எஸ்.அழகிரி, வைகோ, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், கே.எம்.காதர் மொகிதீன், தொல். திருமாவளவன், எம்.எச்.ஜவாஹிருல்லா, தி. வேல்முருகன், ஈ.ஆர்.ஈஸ்வரன், பி.வி.கதிரவன், அதியமான், இனிகோ இருதயராஜ், சு.க.முருகவேல் ராஜன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.இந்த பிரம்மாண்ட பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஏற்பாடு செய்திருகின்றன. கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் திரண்டு தமிழக வாக்காளர்களிடம் ஆதரவு கோரும் இந்த கூட்டத்திற்கு அலைகடலென திரளவேண்டும் என்று கூட்டணிக் கட்சித்தலைவர்கள் அழைப்புவிடுத்திருக் கிறார்கள்.

;