election2021

img

கந்தர்வக்கோட்டை சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு....

புதுக்கோட்டை:
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் கந்தர்வக்கோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு தொகுதி முழுவதும் பொதுமக்கள் மற்றும் கூட்டணிக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக வேட்பாளர் எம்.சின்னத்துரை கூட்டணிக்கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். திமுக வடக்குமாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், தெற்கு மாவட்டப் பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பெரியண்ணன் அரசு, சட்டமன்ற முன்னாள்உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.மாதவன் உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

கந்தர்வக்கோட்டை கீரனூரில் உள்ள காந்தி, அம்பேத்கர் மற்றும் இந்திராகாந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கூட்டணிக் கட்சியினருடன் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, கீரனூர் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் கூட்டணிக் கட்சியினருடன் மக்களைச் சந்தித்து வாக்குகள் சேகரித்தார்.கீரனூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குச் சேகரிப்பில் திமுக மாவட்டப் பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், திமுக ஒன்றிய, நகரச் செயலாளர்கள் ஓ.எஸ்.வெங்கடாஜலம், பி.சண்முகம், சேட், அண்ணாத்துரை, சிபிஐ ஒன்றியச் செயலாளர் நடராஜன், மதிமுக ஒன்றியச் செயலாளர் மதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.  செல்லும் இடங்களில் எல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

;