election2021

img

கட்சியிலேயே இல்லாதவரை வேட்பாளராக அறிவித்த பாஜக..... கேரளத்தின் வயநாட்டில் நடந்த காமெடி...

திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிக்குட்டன். பழங்குடியினர் வகுப்பைச்சேர்ந்த இவர்தான், அவர் சார்ந்தபன்னியா பிரிவின் முதல் பட்டதாரிஆவார். எம்பிஏ படித்துள்ள அவர்,கால் நடைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார்.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியலில், வயநாடு மனன்தாவடி (தனி) தொகுதி வேட்பாளர்மணிக்குட்டன் என்று அறிவிப்பு வெளியானபோது, வேறு யாரோஒரு மணிக்குட்டன் என்று கருதியஇவர், பின்னர் தன்னைத்தான் வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.மணிக்குட்டனிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “தன்னிடம் கேட்காமலேயே, தனக்குத் தெரியாமலேயேதன்னை எப்படி பாஜக வேட்பாளராக அறிவிக்கலாம்?” என்று கொதித்தெழுந்து விட்டார்.“நான் பாஜக-வில் கட்சியில் சேரவும் இல்லை. பாஜக ஆதரவாளரும் இல்லை. ஆனால்,என்னுடைய பெயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒருவேளை வேறு யாராவது இருக்கலாம் என நினைத்து சந்தேகத்துடன் கேட்டபோது என்னுடைய பெயரைத்தான் அறிவித்திருந்தனர்.

ஆனால் எனக்குத் தேர்தலில்போட்டியிடுவதில் விருப்பமில்லை. நான் கால்நடைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக எனக்குரிய வேலையைச் செய்துகொண்டு அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்கிறேன். ஆதலால், என்னை வேட்பாளராகத் தேர்வு செய்ததை நிராகரிக்கிறேன்” எனத்தெரிவித்துள்ளார்.

;