கொல்கத்தா:
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்துமாநிலங்களிலும் பாஜக-வுக்கு எதிராகப் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் சங்கங்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தன.
“விவசாயிகளுக்கு எதிரான வேளாண்சட்டங்களைக் கொண்டுவந்த பாஜகமற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குவரும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள்தகுந்த பாடத்தைப் புகட்டுவோம். இதற் காக தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கம், கேரள மாநிலங்களுக்கு நாங்கள்குழுக்களை அனுப்புவோம். அங்குகுறிப்பிட்ட எந்தவொரு கட்சியையும்நாங்கள் ஆதரிக்க மாட்டோம்; ஆனால்,பாஜகவைத் தோற்கடிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொள்வோம். மோடி அரசு எவ்வளவு மோசமாக விவசாயிகளை நடத்துகிறது? ‘பாஜகவை ஏன், தண்டிக்க வேண்டும்?’ என்பது குறித்து மக்களிடம் தெரிவிப்போம்” என்று பல்பீர் எஸ்.ராஜேவால், யோகேந்திர யாதவ் உள்ளிட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அறிவித்திருந்தனர்.
அதன்படியே தற்போது, கிரித்தி கிசான் யூனியன், யோகேந்திர யாதவின் ‘ஸ்வராஜ் இந்தியா’, ‘சன் யுக்த்கிசான் மோர்ச்சா’ உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் சங்கங்கள் மேற்குவங்கத்திற்குச் சென்று பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை துவங்கியுள்ளன. “பாஜகவுக்கு வாக்களிக்காதீர் கள்..!” என்ற முழக்கத்துடன் பேரணிகளையும் நடத்தி வருகின்றனர்.நந்திகிராம் தொகுதியில் ஞாயிறன்று நடைபெற்ற மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
“நாங்கள் 5 லட்சம் விவசாயிகள் சுமார் 110 நாட்களாக, தில்லியின் எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறோம். தில்லி எல்லையின் சாலைகளில் நிரந்தர வீடுகளையும் கட்டதொடங்கி விட்டோம். ஐந்து லட்சத் துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடுவதைக்கூட மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இப்படியொரு அரசு வங்கத்தில் ஆட்சி அமைத்தால் என்ன நடக்கும் என்று சந்தித்துப் பாருங்கள்” என்று தனது பிரச்சாரத்தில் மேற்குவங்க மக்களுக்கு திகாயத் வேண்டுகோள் விடுத்தார்.மேலும், “நாட்டைக் கொள்ளையடிக்கும் பாஜகவுக்கு யாரும் வாக்களிக்கக் கூடாது. அவர்கள் வாக்குகேட்டு வந்தால், நீங்கள் அவர்களிடம்குறைந்தபட்ச ஆதரவு விலை எப்போது கிடைக்கும்? என்று கேளுங்கள்”என்று மக்களிடம் கூறிய திகாயத், மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன்; அதேநேரம், எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் வாக்கு கேட்க மாட்டேன்” என்று தெரிவித்தார்.